இந்நிலையில், குறிப்பிட்ட பேராசிரியர்கள் இருவரும் கடந்த 3 நாட்களாக தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், பேராசிரியை நிர்மலா தேவி அளித்த தகவலின் அடிப்படையில், பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் பணிபுரியும் பேராசிரியரின் திருச்சுழியில் உள்ள வீட்டுக்கு சிபிசிஐடி போலீஸார் நேற்று பிற்பகலில் விசாரணைக்காகச் சென்றனர்.
ஆனால், பேராசிரியரின் வீடு பூட்டியிருந்ததால் அவரைப் பற்றி அருகில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, நாடார்குளத்தில் உறவினர் வீட்டில் இருந்த குறிப்பிட்ட அந்த பேராசிரியரின் மனைவியிடம் சிபிசிஐடி போலீஸார் நேற்று மாலை விசாரணை நடத்தினர்.
மேலும், இவ்வழக்கு தொடர் பாக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் பணிபுரியும் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மற்றொரு பேராசிரியரும் தலைமறைவாக உள்ளார். 2 பேராசிரியர்களும் தலைமறைவாகி உள்ள தால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இவ்விரு பேராசிரியர்களைக் கண்டுபிடித்து விசாரணை நடத்தினால் மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிர்மலா தேவி மருத்துவ பரிசோதனைக்காக நேற்று இரவு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பலத்த பாதுப்புடன் அழைத்து வரப்பட்டார். மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு உடல் பரிசோதனை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பிறகு, மீண்டும் சிபிசிஐடி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.