பள்ளி நிர்வாகம்தான் பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்க வேண்டும்!உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மணிலிகரையைச் சேர்ந்த ரங்கீஸ் மீரா என்பவர் தாக்கல் செய்த மனுவில். தனது மகன் கடந்த 2010ம் ஆண்டில் புனித கரோட்டி மேல்நிலைப் பள்ளியில் பயின்ற போது சக மாணவன் கல்லால் எறிந்ததில், வலக்கண் பார்வை நிரந்தரமாக பாதிக்கப்பட்டதாகவும், எனவே பள்ளி நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இம்மனு மீது நீதிபதி முரளீதரன் அளித்த உத்தரவில், பள்ளியில் இருக்கும் போது, மாணவனை பாதுகாக்க வேண்டியது பள்ளியின் கடமை என்றும் பார்வை பறிபோனதற்கு பள்ளிநிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் இணைந்து மாணவனுக்கு இழப்பீடாக 25 லட்ச ரூபாயை 4 வாரங்களுக்குள் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.