மதுரை ,
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாள் அமைதிப் பேரணியில் ஆர்ப்பாட்டம் வேண்டாம் என
இதுகுறித்து மதுரையில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் :
திமுக தலைவர் மு.கருணாநிதியின் அவர்களின் 30 ஆம் நாள் நினைவை முன்னிட்டு என்னுடைய தலைமையில் அமைதிப் பேரணி செப்டம்பர் 5 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெறுகின்றது.
இந்த பேரணியானது அண்ணாசிலை அருகே உள்ள திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகிலிருந்து தொடக்கி கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படுகின்றது.இதில் திமுக வின் உண்மையான விசுவாசிகள் பங்கேற்கின்றனர்.
இப்பேரணியில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கருணாநிதியின் உடன்பிறப்புகள் வருகை தரவுள்ளனர்.அப்படி வருகை தரும் தொண்டர்கள் அன்று காலை 10 மணிக்கு அண்ணாசிலை அருகே திரளவேண்டும் என வேண்டுகிறேன். அமைதிப் பேரணியில் பங்கேற்கும் கழக உடன்பிறப்புகள் எந்தவித ஆரவார, ஆர்ப்பாட்டங்களுக்கு இடம் கொடுக்காமல் அமைதியான முறையில் பங்கேற்க வேண்டும்.
காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் முழு ஒத்துழைப்புக் கொடுத்து எவ்வித இடையூறும் தராமல் நடந்து கொள்ள வேண்டும்.சென்னை நகருக்குள் அன்று காலை சரியாக 8 மணிக்கு வந்து சேரும் வகையில் பயணத்தை திட்டமிட வேண்டும், அப்படி வந்த வாகனங்களை தீவுத்திடல் மற்றும் மெரினா கடற்கரையின் உள்பகுதிகளில் நிறுத்திவிட்டு, அமைதிப் பேரணி தொடங்கவுள்ள அண்ணாசிலை அருகே வருகை தர வேண்டும் என்று முக அழகிரி வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் அவர் விடுத்த அறிக்கையில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்து தலைவர் கருணாநிதிக்கு உண்மைத் தொண்டர்களாகிய நாம் அஞ்சலி செலுத்துவோம் வாரீர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது…
DINASUVADU