மதுரை : மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தாண்டு புத்தக கண்காட்சியானது நேற்று தொடங்கியது. மதுரை தமுக்கம் மைதானத்தில் மாநாட்டு மையத்தில் நேற்று அமைச்சர் மூர்த்தி இந்த புத்தக கண்காட்சியை தொடங்கிவைத்தார். அமைச்சர் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து சென்ற பிறகு, கிராமப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மதுரை அரசு இசைக்கல்லூரி சார்பில் கிராமப்புற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த சமயத்தில் “அங்கே இடி முழங்குது” என்ற கருப்பசாமி பாடல் பாடப்பட்டது. […]
மதுரை : மதுரையில் புத்தக கண்காட்சி செப்.6ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதுரை மாவட்டம் தல்லாகுள தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பாக, வருகின்ற 06.09.2024 முதல் 16.09.2024 வரையில் புத்தகத் திருவிழா 2024 நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். 11 நாட்கள் புத்தகக் காட்சி நடைபெறும் இந்த புத்தகக் காட்சிக்கு 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான […]
மதுரை : இன்று (ஆகஸ்ட் 8) முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) வரையில் மதுரையின் சிறப்புகளை போற்றும் வகையில் ‘மாமதுரை’ விழா நடைபெற உள்ளது. மதுரையில் பெருமைகளை போற்றும் வகையில் ஆண்டுதோறும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. யங் இந்தியன்ஸ் எனும் அமைப்பு இந்த விழாவை நடத்தி வருகிறது. மாமதுரை விழா தொடக்கம் : மதுரை தமுக்கம் மைதானத்தின் இன்று மாமதுரை விழா தொடங்கியது. இந்த தொடக்க நிகழ்வில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன், அமைச்சர்கள் பி.டி.ஆர் […]
மதுரை : நாளை ஆகஸ்ட் 03-ம் தேதி மதுரை மாவட்டத்தில் எந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை ஏற்படும் என்பது குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதில், உங்கள் பகுதி இருக்கிறதா? என்று அறிந்து கொள்ளுங்கள் மக்களே. மதுரையில் உள்ள முக்கியமான பகுதியில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது. மின்தடை ஏற்படுத்துவதற்கான காரணங்களை பற்றியும் பார்க்கலாம். மதுரை மெட்ரோ : விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலாநகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, […]
மதுரை: மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கப்பலூர் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் கடந்த 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நடைமுறையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக நேற்று தமிழக அரசும் ஓர் செய்தி குறிப்பை வெளியிட்டு இருந்தது. அதில், கப்பலூர் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள உள்ளூர் மக்கள் முன்வைத்த கோரிக்கை குறித்து தமிழக […]
தொல்லியல் துறை : தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் துறை பணிகள் குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். அதில், மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை பற்றி குறிப்பிட்டார். அவர் குறிப்பிடுகையில், திருமலை நாயக்கர் அரண்மனை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்டச் சின்னமாக 1972-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021இல் அறிவித்த தேர்தல் அறிக்கையில் பண்டைய மரபுச் சின்னங்கள் அவற்றின் தொன்மை […]
மதுரை : அதிமுகவை ஒன்று சேர்ப்பது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க தென்காசியில் நேற்று முதல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் விகே சசிகலா. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரான ஆர்.பி. உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார். மேலும், அந்த சந்திப்பில் தென்காசியில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள சசிகலாவை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் அவர் பதிலளித்தார். இதனை குறித்து அவர் கூறியதாவது, “சசிகலாவின் இந்த ஆடி மாத சுற்றுப்பயணம் என்பது ஒரு சுற்றுலா […]
பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இன்று புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக மொத்தம் 3,677 காளைகளுடன் 1,412 மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்த நிலையில் அதில் 1,000 காளைகளுக்கும், 700 மாடுபிடி வீரர்களுக்கும் மட்டுமே போட்டியில் பங்கேற்க […]
மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தைத்திங்கள் அன்று (அதாவது ஜனவரி 15-ம் தேதி) நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் ஒன்றை செய்தனர். அதில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதனால் அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து ஒரு கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது ” அதிமுக சார்பாக அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மிகவும் மகிழ்ச்சியான ஆண்டாக இந்த ஆண்டு தொடங்கியுள்ளது. அதிமுக ஒரு பிரகாசமான எதிர்காலத்தை மீண்டும் உருவாக்கின்ற வகையில் விக்ரமாதித்தியன் கதை போல மீண்டும் விக்ரமாதித்தியன் உடைய சாகசங்கள் தொடர்கிறது. அவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து நிகழ்த்துவார். இந்த ஆண்டு மிகப்பெரிய மகிழ்ச்சியை அதிமுகவிற்கு […]