கிருஷ்ணகிரி அருகே 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யபட்ட குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி காவல்துறையினர் நேற்று வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது புலியரசி என்ற பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த, லாரியை போலீசார் சோதனை செய்தனர்.
அதில் அடுக்கடுக்காக அட்டை பெட்டிகளில் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து லாரியுடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், லாரி உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு 18 லட்சம் ரூபாய் என்று போலீசார் தெரிவித்தனர்.
DINASUVADU