கிருஷ்ணகிரி : ஓசூர் அருகே தேவரபெட்டாவில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி கணேசனை சுட்டுக் கொன்றுவிட்டு அண்ணன் சண்முகம் தப்பியோடினார். இந்நிலையில் இக்கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி : போச்சம்பள்ளி அருகே 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை. சக மாணவர்கள் 2 பேர் ஹால் டிக்கெட், புத்தகத்தை கிழித்து எரிந்ததால் மனமுடைந்த மாணவி தமிழரசி தற்கொலை செய்துள்ளார். மேலும் தேர்வெழுத உதவும் ஹால் டிக்கெட் கிழித்ததால் தேர்வு எழுத முடியால் போகும் என்று அஞ்சி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக என தகவல் தெரிவிக்கக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று ஒரு திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொள்ள வந்த தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மாலையில் தனியார் ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அடுத்த மாதம் 28-ந்தேதி, கிருஷ்ணகிரியில் வேலூர், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வட்டார, நகர, தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழகத்திற்கு, மத்தியஅரசு அதிககவனம் செலுத்தவேண்டும். தமிழகஅரசு, மக்களின் எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்க தவறுகிறது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாளை காலை 8 மணிக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்கிறார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் குடியரசு தினவிழாவின் போது எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுத்திட, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள வரமலைகுண்டா, குருவிநாயனப்பள்ளி, வேப்பனப்பள்ளி, […]
ஒசூர் சானமாவு வனப்பகுதியில் 10 யானைகள் முகாமிட்டுள்ளதால் வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை; மேய்ச்சல் பணிகளுக்காக யாரும் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தல்.. source: dinasuvadu.com
கிருஷ்ணகிரி அணையின் பிரதான மதகில் முதல் ஷட்டர் கடந்த மாதம் 29-ந் தேதி உடைந்தது. இதனால் அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த 51 அடி தண்ணீரில், உடைந்த மதகை சீர் செய்ய அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 19 அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதாவது சுமார் 1.40 டி.எம்.சி. தண்ணீர் வெளியேறியது. பின்னர் உடைந்த ஷட்டர் 7 நாட்களுக்கு பின் முற்றிலும் அகற்றப்பட்டது. இதையடுத்து புதிதாக மதகில் ஷட்டர் பொருத்தும் பணி தொடங்கியது. நேற்று 3-வது நாளாக ஷட்டர் […]