தனது இரண்டாவது கள்ளக்காதலனுடன் உல்லாசத்தில் இருந்த போது குழந்தை அழுததால் கடுப்பான தாய் செய்த காரியம். போதையில் தள்ளாடியபடி காவல்துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்த தாய். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் பகுதியை சேர்ந்தவர் நந்தினி ஆவார்.இவரது கணவர் மாதேஷ் ஆவார்.இருவருக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது.இருவருக்கும் 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து வாழ்கின்றன.நந்தினிக்கு அப்பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.அது நாளடைவில் […]
தனது வளர்ப்பு மகளான 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை.கைது செய்த காவல்துறையினர். வழக்கு தொடர்ந்ததை அடுத்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் நாரிபுரம் கிராமத்தில் சீனப்பா என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்துள்ளார்.மேலும் இவர் 13 வயதான சிறுமி ஒருவரை வளர்த்து வந்துள்ளார். அந்த சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கம் […]
கிருஷ்ணகிரி மாவட்ட சுங்கச்சாவடியில் வாக்குவாத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநரின் மண்டை உடைப்பு பெண் ஊழியர் தாக்கியதால் சக ஓட்டுநர்கள் முற்றுகை காவேரிப்பட்டினத்தை சேர்ந்தவர் அசோக் இவர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு லாரியை ஓட்டி சென்றார். கிருஷ்ணகிரி மாவட்ட சுங்கச்சாவடியில் பர்கூரை சேர்ந்த செண்பகவள்ளி என்ற கட்டண ஊழியர் லாரியை மறித்து நிறுத்தினார்.இந்நிலையில் ATM ஸ்வைப்பிங் கருவியை வாங்கிய அசோக் ரகசிய எண்ணை மெதுவாக பதிவு செய்துள்ளார். இதனால் கடுப்பாகிய பெண் ஊழியர்க்கும் […]
நேற்று கிருஷ்ணகிரி , பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சுங்கசாவடி வழக்கம்போல இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது பெங்களூரில் இருந்து சென்னை சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடி கட்டண வசூல் செய்யும் மையத்தில் மோதியது. இதில் கட்டணம் வசூல் செய்யும் மையம் 50 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. அப்போது லாரி இரு சக்கர வாகனத்தின் மீதும் மோதியது. இந்த விபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த சென்னப்பன் மற்றும் பரிமளா ஆகிய இருவரும் சம்பவ […]
அயோத்தி வழக்கில் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பால் எந்தவிதமான அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க நாடு முழுவதும் பலத்த போலீஸ் மற்றும் துணை இராணுவத்தினர் மூலம் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்து உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அடுத்து பாண்டுரங்கன் தொட்டியை சார்ந்தவர் கண்ணன்.இவர் மோப்பநாய் பிரிவில் வேலை செய்து வருகிறார்.இவரது உறவினர் பெண் நதியா.இவர் திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை காவலராக வேலை செய்து வருகிறார். நதியா ,கண்ணன் இருவரும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்து உள்ளனர்.இந்நிலையில் நதியவை கண்ணன் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனால் தான் ஏமாந்து விட்டதாக கூறி நதியா விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்து உள்ளார். நதியாவை மீட்ட அவரது உறவினர்கள் […]
பிகில் திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று “பிகில்” திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. “பிகில்” திரைப்படத்திற்கு சிறப்புக் காட்சிகள் வழங்க முடியாது என கூறியிருந்த நிலையில் இறுதியாக அரசு நிபந்தனை பெற்றபின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 5 மணிக்கு சிறப்பு காட்சியில் தமிழகத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிகில் திரைப்படத்தின் சிறப்பு சிறப்புக் காட்சிகள் வெளியிடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் கோபத்தின் உச்சிக்குச் சென்றனர். கோபமடைந்த […]
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கூலித்தொழிலாளி ராஜா உள்ளார். இவரது மனைவி சத்யா இவர்களுக்கு 3 வயது பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் பாரூர் அரசு மருத்துவமனையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இரண்டாவதும் பெண் குழந்தை என்பதால் ராஜாவின் தாய் பொட்டியம்மாள் கோபமடைந்தார். இதை தொடர்ந்து குழந்தையும் , தாயும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்தனர். வீட்டிற்கு வந்து இரண்டு மாதங்கள் பின்னர் ஒருநாள் சத்யா துணி துவைக்க சென்று […]
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அடுத்த பனகமுட்லு கிராமத்தை சார்ந்த செல்வம் (45) இவர் காவேரிபட்டணம் அருகே உள்ள சந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கடந்த 12 வருடங்களாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். செல்வத்திற்கு பல ஆண்டுகளாக குடிக்கும் பழக்கம் உள்ளதால் மாதத்தில் பாதி நாள்கள் பள்ளிக்கு வராமல் இருந்தார். இதனால் ஆறு மாதத்திற்கு முன் ஊதிய உயர்வை குறைத்து வட்டார கல்வி அலுவலர் எச்சரிக்கை கடிதம் கொடுத்து உள்ளார். ஆனால் தொடர்ந்து செல்வம் குடிப்பதை நிறுத்தாமாலும் மீண்டும் […]
கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனத்தில் செல்லும் பொது, ஹெல்மெட்டில் இருந்த போன் வெடித்ததால் இளைஞர் படுகாயம் அடைந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ள ஓசூர் அடுத்த உள்ள புளியரசி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம். 40 வயதான இவர், தனது வேலை காரணமாக ஓசூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சூளகிரி அருகே சென்ற பொது, அவருக்கு போன் வந்தது. அதனை எடுத்து அவர் தனது ஹெல்மெட்டில் வைத்து பேசினார். அப்பொழுது அவர் ஹெல்மெட்டில் இருந்த செல்போன் வெடித்தது.இதனால் அவர் தலை மற்றும் […]
சாலையில் ஹெல்மெட் போடாத காரணத்தால் விபத்துகளின் போது நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனை கட்டுப்படுத்த சாலை விதிகளில் பல கட்டுப்பாடுகள் விதித்தும். இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவருமே ஹெல்மெட் அணிய வேண்டும் என புதிய உத்தரவுகளை பிறப்பித்தது. இந்நிலையில் ஓசூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிய புதிய யுத்திகளை கையாண்டு வருகிறது. இதன்படி, ஓசூர் முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணியாவிட்டால், அவர்களை அந்த முக்கிய சாலைகளில் போலீசார் […]
கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் மத்திய நீர்வளத்துறை குழுவினர் 7 பிரதான மதகுகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி அணையின் இடதுபுற பிரதான மதகு ஒன்று கடந்த ஆண்டு உடைந்ததால் 2 கோடி ரூபாய் செலவில் மாற்றி அமைக்கப்பட்டது. உடைப்பு ஏற்பட்ட மதகு மாற்றப்பட்ட போதிலும் மீதமுள்ள 7 மதகுகள் பலவீனமாக இருப்பதால் கிருஷ்ணகிரி அணையில் 52 அடிக்கு பதிலாக 40 அடி வரை மட்டுமே நீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதனிடையே, இந்த மதகுகளை மாற்றியமைக்க மத்திய […]
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை பகுதிக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் அனுப்பி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, நிவாரணப் பொருட்களை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கி வருகின்றனர். பெறப்படும் நிவாரணப் பொருட்கள் லாரிகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பபடுகிறது. அந்த வகையில், பால் பவுடர், போர்வை, தண்ணீர் பாட்டில்கள், அரிசி மூட்டைகள், […]
கிருஷ்ணகிரி அருகே 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யபட்ட குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி காவல்துறையினர் நேற்று வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது புலியரசி என்ற பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த, லாரியை போலீசார் சோதனை செய்தனர். அதில் அடுக்கடுக்காக அட்டை பெட்டிகளில் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியுடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், லாரி உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட குட்கா […]
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி நீர்த்தேக்கத்தின் மதகுகளை மாற்றியமைப்பதற்கான டெண்டரை எதிர்த்து தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக மணிவேல் என்பவர் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி நீர்த்தேக்கத்தின் மதகுகளை மாற்றியமைப்பதற்கான ரூ.3 கோடி மதிப்பிலான டெண்டருக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்தார் .அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது . மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன் தாய், மகள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய், மகள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.பின்னர் சோக்காடி கிராமத்தைச் சேர்ந்த வளர்மதி, அவரது தாய் தாதம்மாள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தங்களது வீட்டை வெங்கடசாமி என்பவர் அபகரிக்க முயல்வதாக குற்றச்சாட்டை முன் வைத்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகே 2016ல் ஒன்றரை வயது குழந்தையை வன்கொடுமை செய்த வழக்கில் உதயகுமார் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கலப்பு திருமணம் செய்து கொண்டவருக்கு ஓசூர் அருகே 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, அபராதம் செலுத்தாததால் வீட்டுக்கு முள்வேலி அமைத்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றரை ஆண்டுக்கு முன் ஜோகிர்பாளையத்தை சேர்ந்த சந்துரு அதே கிராமத்தை சேர்ந்த வேறு சாதியைச் சேர்ந்த தேவயானி என்பவரைக் காதலித்து மணம் முடித்துக் கொண்டு கோவையில் வசித்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு சந்துரு தனது குடும்பத்துடன் ஜோகிர்பாளையத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் தற்போது,உள்ளூர் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் விளைபயிர்கள் சேதமடைந்துள்ளன. ஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புறபகுதிகளில் நேற்று மாலை திடீரென பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையால் அப்பகுதியில் விவசாயிகள் பயிரிட்டிருந்த தக்காளி, கொத்தமல்லி, பாகற்காய், பூகோசு, ரோஜா, பீன்ஸ், வெள்ளரி உள்ளிட்ட விளைபயிர்கள் மழையில் சேதமானது. பயிர்கள் அனைத்து மழைநீரில் முழ்கியது, அங்குள்ள ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்