கிருஷ்ணகிரியிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு..!!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை பகுதிக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் அனுப்பி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, நிவாரணப் பொருட்களை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கி வருகின்றனர். பெறப்படும் நிவாரணப் பொருட்கள் லாரிகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பபடுகிறது.
அந்த வகையில், பால் பவுடர், போர்வை, தண்ணீர் பாட்டில்கள், அரிசி மூட்டைகள், மருந்துகள் என, 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள், புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை பகுதிக்கு, இரண்டு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.இதனை மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், வருவாய் அலுவலர் சாந்தி ஆகியோர் கொடி அசைத்து அனுப்பி வைத்தனர்.
dinasuvadu.com