[Image source : PTI]
வருமான வரித்துறையினர் மீதும் அடையாளம் தெரியாத நபர்கள் மீதும் கரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் வீடுகள் அலுவலகங்கள், மற்றும் அவரது உறவினர்கள் இல்லங்கள், டாஸ்மாக் ஒப்பந்ததாரர்கள் வீடுகள் என கரூர், சென்னை, கோவை மாவட்டங்களில் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது கரூரில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் வீட்டின் முன் குவிந்த அவரது ஆதரவாளர்கள் வருமான வரித்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக தெரிகிறது. மேலும் ஒரு சில இடங்களிலும் அவர்களது ஆதரவாளர்கள் வருமான வரித்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்த சமயம் வருமான வரித்துறையினர் வாகனங்கள் சில சேதப்படுத்தப்பட்டன. மேலும் சில அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதனால் தாக்கப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மீதம் உள்ள அதிகாரிகள் சோதனையை தொடர்ந்தனர்.
இது தொடர்பாக வருமான வரித்துறையினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது பணிசெய்ய விடாமல் தடுத்தல், சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதே போல, திமுகவினர் சிலர் அளித்த புகாரின் பெயரில் வருமானவரித்துறையினர் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறையினர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், தாக்கியதாகவும் திமுகவினர் புகார் அளித்துள்ளனர். இதனால் வருமானவரித்துறையினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஆளும் திமுக அரசு…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…