இரவிலும் நீடித்த ஐடி ரெய்டு.! கரூர் துணை மேயர் வீட்டிற்கு சீல்.?
தமிழகத்தில் நேற்று காலை தொடங்கிய வருமான வரி சோதனை இரவிலும் பல்வேறு இடங்களில் தொடர்ந்தது.
நேற்று காலை முதலே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வந்தனர். இதில் கரூரில் பல்வேறு இடங்களில் இரவு முழுக்க இந்த சோதனை நீடித்துள்ளது. குறிப்பாக டாஸ்மாக் ஒப்பந்தக்காரார்கள் மற்றும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவரது உறவினர்களில் சிலரது வீடுகள் என இந்த பட்டியல் நீண்டது.
எவ்வளவு நாட்கள் ஐடி சோதனை நடத்தினாலும் முழுதாக ஒத்துழைப்பு தருவோம் எனவும், 2006 முதல் இன்று வரை ஒரு சதுர அடி நிலம் கூட எங்கள் பெயரில் நாங்கள் வாங்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார். மேலும், அரசு அதிகாரிகளை கொண்டு எதிர்கட்சிகளை பாஜக மிரட்ட பார்க்கிறது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பார்தி கண்டனம் தெரிவித்தார்.
கரூர் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டில் நேற்று காலை சிலர் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தடுத்தால், காவல்துறை பாதுகாப்போடு மீண்டும் துவங்க நேற்று இரவு வரைஅதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சோதனை முடிந்து கரூர் துணை மேயர் வீட்டிற்கு அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி சீல் வைத்தனர். இதனால் அங்கு மேயர் ஆதரவாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வீட்டிற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.