கரூர் அருகேயுள்ள புலியூர் காளிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வந்து மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் 300 குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் விவசாயம் செய்து பிழைப்பு நடத்துகிறோம். இந்நிலையில் எங்கள் ஊரில் திருச்சி மெயின் ரோட்டில் தனியார் சிமெண்டு ஆலை எதிரில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை கோர்ட்டு உத்தரவுப்படி மூடப்பட்டது. மேலும் இந்நிலையில் அந்த டாஸ்மாக் கடையை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. இங்கு மது அருந்துபவர்கள் வயல்வெளிகளில் கண்ணாடி […]
கரூரை அருகே உள்ள காந்திகிராமம் பகுதியில் உள்ள தனியார் நகைகடையில் மர்ம நபர்கள் 10 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்றனர். கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரகதீஸ் என்ற தனியார் நகை கடை உள்ளது. இந்த கடையில் மர்ம நபர்கள் சிலர் நேற்றிரவு நுழைந்து, கடையில் இருந்த சுமார் 10 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தேசமயம் தங்க பொருட்கள் பாதுகாப்பான இரும்பு அறையில் வைத்ததால், அப்பொருட்கள் கொள்ளை போகாமல் தப்பித்துள்ளது. இதனையடுத்து, […]
நேற்று இரவு முதல் விடிய விடிய கரூர் அருகே கோழிப்பண்ணை ஒன்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரை அடுத்த தாளவாய்புரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் அப்பகுதியில், சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். அந்த கோழிப்பண்ணைக்கு நேற்று நள்ளிரவு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு மற்றும் முறையாக ஆவணங்களைப் பராமரிக்காததது ஆகிய புகார்களின் பேரில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. நள்ளிரவில் […]
போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கரூரில் புதிதாக அமைய உள்ள மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். நகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் பகுதியில் 17 ஏக்கர் பரப்பளவில், 269 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ கல்லூரி கட்டுவதற்கான பணிகள் அண்மையில் தொடங்கின. பணிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், அடுத்த ஆண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும் வகையில் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்கள் பின்நோக்கி நடந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை பஸ்நிலையம் முன்பு பேருந்து கட்டண உயர்வை ரத்துசெய்ய கோரியும், தமிழக அரசை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்கள் பின்நோக்கி நகர்ந்து செல்லும் போராட்டம் செய்தனர். இதில் 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவரை குளித்தலை காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு தனியார் திருமணமகாலில் தங்கவைத்துள்ளனர். https://www.facebook.com/100011243927225/videos/543527182698741/ https://www.facebook.com/100011243927225/videos/543527182698741/
கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். டிடிவி தினகரன் தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சாலை மறியலில் ஈடுப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் 47 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம் இந்தியாவில் மிகவும் சுத்தமான மாவட்டங்களில் ஒன்று எனவும்,மாசில்லாத மாவட்டம் எனவும் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டமான SwachhBharatஆல் அறிவிக்கப்பட்டுள்ளது
கரூர் மாவட்டம்; அரவக்குறிச்சியை அடுத்த வெஞ்சமங்கூடலூர் என்ற ஊரில் அரசு மதுக்கடையில் இரவு நேரத்தில் பூட்டை உடைத்து, ரூ 4,88,000 மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்… sources; dinasuvadu.com
கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி பகுதியில் உள்ள போத்துராவுத்தன்பட்டி, பஞ்சப்பட்டி, பாப்பக்காபட்டி, சிவாயம், வயலூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு அவர்களின் விளை நிலத்தில் எள் விளைச்சலில் அதிக அளவு மகசூல் கிடைத்தது. இதனால் கடந்த வாரம் கலெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்த விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் தங்களுக்கு எள் மகசூல் அதிக அளவு கிடைத்துள்ளது. இதனால் வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு ஒழுங்கு முறை விற்பனை கூடம் அமைத்து விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைவித்த […]