கரூர் மாவட்டத்தில் கீழத்தலையூரில் உள்ள மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் குமார் ஆவார்.இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு விபத்தில் மரணமடைந்துள்ளார். இவரது மனைவி விஜயா ஆவார்.இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.இவரது ஒரு மக்கள் அருகில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.இவர்களது வீட்டிற்கு அருகில் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பலமுறை உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.இந்நிலையில் மாணவிக்கு சில நாட்களாக உடல்நிலை […]
தேர்தலை முன்னிட்டு அனைத்து இடங்களிலும், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் கோடிக்கணக்கில் பணங்கள், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்களும் சிக்கியுள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டம் தோகைமலை காவல் எல்லைக்கு உட்பட்ட பாதிரி பட்டியில் ராஜேந்திரன் என்பவர், அதிமுக ஊராட்சி செயலாளராக உள்ளார். இவர் நேற்று 61,150 ரூபாயை கையில் எடுத்துச் சென்றுள்ளார். அப்போது தேர்தல் பறக்கும் படையினர் சோதனை பணியில் ஈடுபட்டுள்ளதை கண்டவுடன் பணத்தை கீழே போட்டு விட்டு […]
கரூரில் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்த கணித ஆசிரியர் நிறைமதி. தன்னுடைய விடா முயற்சியால் 2017_ஆம் ஆண்டில் நடந்த குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை துணை ஆட்சியருக்கான பணி நியமன ஆணையை பெற்றுள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள சுக்காலியூர் ஊராட்சியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணி செய்து வருபவர் நிறைமதி. ஆசிரியர் நிறைமதி சிறுவயது முதலே ஆட்சியராக வேண்டும் என்ற கனவோடு விடா முயற்சியுடன் படித்து வந்து அதற்கான தேர்வை எழுதி வந்தார்.அவர் […]
தமிழகத்தில் குட்கா,பான்மசாலா போன்ற போதை பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது.இதில் உற்பத்திக்கு எந்த தடையும் இல்லை,ஆனால் பயன்பாட்டிற்க்கு மட்டும் தடை விதித்தது.இதேபோல் கரூர் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்பராக் உட்பட அனைத்து விதமான போதைப்பொருட்களும், 216 மூட்டைகளில் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 202 அட்டைப் பெட்டிகளில் இருந்த குட்கா, பான்பராக் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் விற்பனை […]
அதிக விபத்து ஏற்படும் புலியூர், உப்பிடமங்கலம் சாலையில் உள்ள லிங்கத்தூர் வளைவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். கரூர் அடுத்த உப்பிடமங்கலம் மேல்பாகம் லிங்கத்தூர் அழகு மலை சுவாமி கோயில் அருகே சாலை வளைவில் அதிக விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க வலியுறுத்தி உப்பிடமங்கலம் பகுதி பொதுமக்கள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரிடம் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலை துறை பொறியாளர்களுடன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற […]
குளித்தலையில், பல்வேறு திட்டங்களின் மூலம் கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்ததால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான உத்தரவை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். கரூர் மாவட்டம் குளித்தலை பகுதிகளில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு திட்டங்களின் மூலம் கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்தது. அரசுக்கு பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதன் மூலம் பழுதடைந்த வீடுகளை பராமரிக்கும் பணிகளை மேற்கொள்வதற்கான உத்தரவுகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பயனாளிகளுக்கு வழங்கினார். முழு […]
கஜா புயலின் தீவிரம் தொடர் மழையாக மாறியுள்ளதன் காரணமாக திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (16.11.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, தஞ்சை, சிவகங்கை, அரியலூர், திருப்பூர், புதுச்சேரி, காரைக்கால், தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுள்ள நிலையில் மேலும் கஜா புயல் காரணமாக விருதுநகர், சேலம், ஈரோடு மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை […]
புவி வெப்பமயமாதலால் உலக அழிவை தடுக்கும் கோரிக்கைக்காக நேற்று கரூர் வெண்ணெய்மலையில் 24 மணிநேரம் தொடர் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். பிற்பகல் 11 மணிக்கு தியானத்தை தொடங்கி இன்று 11 மணி வரை தியானத்தில் இருக்கிறார். இவரது கோரிக்கைகளாக, ஒன்றரை ஆண்டுகளில் இந்தியவில் 135கோடி, மரங்களும், 800 கோடி மரங்களும் உருவாக்குவதற்காக 2400 கோடி விதைப்பந்துகளை விமானம் மூலம் தூவ வேண்டும். பறவைகள் வேட்டையாடுவதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா சபையின் […]
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்த சேர்ந்தவர் ராஜன் (27). இவர் திருப்பூரில் பஞ்சாலையில் வேலை பார்த்தது வருகிறார். மோகன் (20) இவர் திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சியை சேர்ந்தவர். இவர்கள் தீபாவளிக்காக ஊருக்கு செல்ல ஒரே பைக்கில் இருவரும் சென்றுள்ளனர். நள்ளிரவு 2 மணி அளவில் இருவரும் சென்றுகொண்டு இருக்கும் பது முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்ற பொது எதிரே வந்த பேருந்து மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றாமல் கரூரில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் பட்டாசு விற்பனை மற்றும் இருப்பு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை கரூர் ஆட்சியர் முறையாக பின்பற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சுகாதாரத்துறை இயக்குனர் சுவாதி அளித்துள்ள தகவலில், கரூர் மாவட்டத்தில் 5 பேர் டெங்கு காய்ச்சலால், 6 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என செய்தியாளர்களுக்கு தகவல் அளித்துள்ளார். மேலும் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள[படுவதாகவும் கூறியுள்ளார்.
மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரையை ஊர் உள்ளே செல்லவிடாமல் மக்கள் முற்றுகையை செய்தனர். கரூர்: கரூர் மாவட்டத்தில் கடந்த 7ம் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது கரூர் அடுத்த வீரணம்பாளையம் என்ற இடத்தில் துவக்க பள்ளியை பார்வையிட்டார். பின்னர் அதன் அருகில் உள்ள வாரிவாய்க்காலில் கட்டப்பட்ட தடுப்பணையை திறந்து வைத்தார். தடுப்பணையை கவர்னர் திறந்து வைத்தபோது, அதன் அருகில் இருந்த மின்கம்பத்திலிருந்து துவக்க பள்ளிக்கு மின் சப்ளை செய்யப்பட்டு, குடிநீர் விநியோகிக்கப்பட்டு இருந்தது. கவர்னர் […]
கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 13 பேரை கைது செய்த காவல்துறை 13 பேரின் மீது வழக்கு பதிவு செய்தது இந்நிலையில் கைது செயப்பட்ட நாம் தமிழர் கட்சியினர் 13 பேரை நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டபோது அவர்களை சிறைப்படுத்த எந்த அவசியம் இல்லை என கூறிய நீதிபதி கைது செய்யப்பட்ட 13 பேரையும் விடுதலை செய்தார். DINASUVADU
கரூரில் நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 13 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தனர் .இதன் பின் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டபோது அவர்களை சிறைப்படுத்த அவசியம் இல்லை எனக் கூறி நீதிபதி விடுதலை செய்தார். DINASUVADU
கரூரில் ஆட்சியர் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. நேற்று ராஜீவ் காந்தி பிறந்தநாளையொட்டி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. DINASUVADU
கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. DINASUVADU
1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல் அருவிக்கு வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவின் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.80 ஆயிரம் கனஅடி திறக்கப்படுவதால் 9 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.
திமுக தலைவர் கருணாநிதி இறந்ததை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த போது கரூர் மாவட்டம் புலியூரை அடுத்த காளிபாளையத்தில் திமுக தொண்டர் முருகேசன் (வயது 75) மாரடைப்பால மரணம் அடைந்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சி.ஐ.டி.யு-எல்.பி. எப். சார்பில் பணி வரன் முறை, காலமுறை ஊதியம், மாற்றுப்பணி கோரிக்கைகளை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்திட வலியுறுத்தி கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொ.மு.ச. மாவட்டச் செயலாளர் கண்ணதாசன் தலைமை தாங்கினார். சி.ஐ. டி.யு. ஊழியர் சங்க கவுரவ தலைவர் கா.கந்தசாமி முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், தொ.மு.ச. கவுன்சில் செயலாளர் அப்பாசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன், டாஸ்மாக் ஊழியர் சங்க […]