தமிழகத்தில் தற்போது கடும் வெயில் நிலவி வரும் நிலையில் 4 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்துள்ளது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை, தோகைமலை, கடவூர் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும் ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 4 மணி நேரத்திற்கு மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. சூறைக்காற்றுடன் பெய்த இந்த கன மழையால் அங்கு பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.மேலும் கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி அடைந்துள்ளதாகவும்,மழையின் வரவால் விவசாயிகள் மகிழ்ச்சி […]
கரூரில் 108 ஆம்புலன்ஸ் உதவியாளருக்கு கொரோன தொற்று உறுதி. இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் வெளியில் வந்து தங்களது பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கரூர் மாவட்டம் கடம்பன்குறிச்சி சேர்ந்த 25 வயதான அரவிந்த், சென்னை ராயபுரத்தில் 108 ஆம்புலன்ஸில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இதனையடுத்து, […]
கரூர் மாவட்ட நிர்வாகம் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டமாக கரூர் மாற உள்ளது என தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில், 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். […]
கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 95 வயது நிரம்பிய மூதாட்டி உட்பட ஐந்து நபர்கள் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் கரூரை அடுத்த காந்தி கிராமத்தில் அமைந்துள்ள கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 அடுக்குகளுடன் கூடிய பிரமாண்ட கட்டிடத்தில், 300 படுக்கை வசதிகளுடன் 7வது தளத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, திண்டுக்கல் மற்றும் நாமக்கல் மாவட்டங்களையும் சேர்ந்த […]
கரூர் அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை பெற்று வந்த 43 பேர் டிஸ்சார்ச். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் நோயானது தற்போது தமிழகத்திலும் ஆயிரக்கணக்கானோரை பாதித்துள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து […]
துப்பரவு பணியாளர்களுக்கு பாத பூஜை செய்த கரூர் வேலாயுதபாளைய தொழிலதிபர் மற்றும் குடும்பத்தினர்! உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் அச்சத்தால் இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் யாரும் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் இந்த காலகட்டத்தில் மக்களுக்காக ரோட்டில் சென்று குப்பைகள் அள்ளி நாட்டை சுத்தம் செய்து வரும் துப்புரவு பணியாளர்களை நிச்சயமாக நாம் நேரத்தில் பாராட்டியாக வேண்டும். இந்நிலையில், தற்போது கரூர் மாவட்டம் […]
பொதுவாக இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் பல இடங்களில் லஞ்சம் என்பது இன்னும் நடைமுறையில் இருந்து கொண்டே உள்ளது. அதுபோல தற்போது இந்தியாவில் உள்ள கரூர் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கரூர் மாவட்டத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் தான் ஜெயராணி. கரூரை சேர்ந்த ரமேஷ் என்பவர் வீடு கட்டுவதற்கு முடிவு செய்ததால். தனது வீட்டு மனையை பிரிப்பதற்காக ஜெயந்தி உதவியை நாடியுள்ளார். இந்நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகிய ஜெயந்தி இது சம்பந்தமான மனுவை பெற்றுக்கொண்டு, அவருக்கு […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அவரது 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழகம் முழுவதும் திமுகவை சேர்ந்த கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கேக் வெட்டியும், அன்னதானம் அளித்தும் தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் கரூரில் 67 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டி ஸ்டாலின் பிறந்தநாளை திமுகவினர் கொண்டாடினர். மேலும் கரூர் மாவட்டம் முழுவதும் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதன் தொடக்க விழாவாக இன்று காலை திமுக […]
கரூர் அருகே உள்ள சணப்பிரட்டி எழில் நகரை சேர்ந்த சேகர் என்பவர் அப்பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கிருஷ்ணவேணி இவர்களது மகன் பாலச்சந்தர் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அன்றிலிருந்து கணவன், மனைவி இருவரும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று கரூர் திண்டுக்கல் இடையிலான தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து இருவரும் தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறை சடலத்தை […]
ஆயுர்வேத சிகிச்சை என்ற பெயரில் விபச்சாரம்.தொடர்ந்து உல்லாசம் அனுபவித்து வந்த முக்கிய பிரமுகர்கள். கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் களத்தில் இறங்கிய காவல்துறையினர். கரூர் மாவட்டத்தில் செங்குந்தநகரம் என்ற பகுதி உள்ளது.இப்பகுதியில் அதிகளவு டெக்ஸ் நிறுவனங்கள் செயல்படுகின்றன.இதனால் அப்பகுதியில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான வெளியூர் வர்த்தகர்கள், தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர். இந்த பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் ஒரு மையம் செயல்பட்டு வருகிறது.இந்த மையத்திற்கு அடிக்கடி கார்களில் முக்கிய பிரமுகர்கள் விஐபிகள் வந்து சென்றவாறு இருந்துள்ளனர். […]
மது அருந்தும் போட்டி வைத்து இணையத்தில் அழைப்பிதல் வைத்த இளைஞர்கள் பரவிய பத்திரிக்கை அடுத்து குவிந்த மதுபிரியர்களை பொறி வைத்து பிடித்த காவல்துறை என வித்தியாசமான அழைப்பிதழ் சம்பவம் நடந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள புவனாசிப்பட்டியில் மது அருந்தும் போட்டி நடப்பதாக சமூக வலைதளங்களில் அதி வேகமாக ஒரு விளம்பரம் ஒன்று பரவி வந்தது.அந்த விளம்பரத்தில் நுழைவுக்கட்டணமாக ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும் முதல் மருந்துபவர்களுக்கு முதல் பரிசாக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனால் […]
தனது வயதான மகனுக்கு 17 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்த தாய்.சிறுமி அளித்த புகார். மகன் உட்பட நாலுபேர் கைது.தலைமறைவான தாயிற்கு வலைவீச்சு. கரூர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் ஜெயலட்சுமணன் ஆவார்.இவருக்கு இவரின் பெற்றோர் திருமணம் செய்து வைக்க எண்ணியுள்ளனர்.ஆனால் அவருக்கோ வயது தொடர்ந்து ஏறிக்கொண்டே இருந்துள்ளது. மேலும் அவருக்கு வயது அதிகம் ஆகிவிட்டதால் பலரும் பெண் தர மறுத்துள்ளனர். இந்நிலையில் எப்படியாவது திருமணம் செய்து வைக்க விரும்பிய ஜெயலட்சுமணனின் தாயார் நல்லம்மாள் 17 வயது […]
கரூரை அடுத்த வெங்கமேடு பகுதியை சார்ந்த 13 வயது சிறுமி கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் காணவில்லை என அவரது பெற்றோர் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.அதில் சிறுமியின் வீட்டின் அருகில் இருந்த கலைச்செல்வி மற்றும் குமுதவல்லி வேலை வாங்கி தருவதாக கூறி திருப்பூர் அழைத்து சென்று கல்பனா ,சந்தான மேரி , மணி ஆகியோருடன் பாலியல் தொழிலில் தொழிலில் ஈடுபடுத்தியது […]
கரூரில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூரை சேர்ந்த சிவசாமி என்பவர் ஷோபிகா இம்பெக்ஸ் கொசுவலை நிறுவனத்தை நடத்திவருகிறார். வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து வருமான வரித்துறையினர் சிவசாமி வீட்டில் நேற்று முன்தினம் முதல் சோதனை மேற்கொண்டனர்.2-வது நாளாக நடைபெற்ற சோதனையில் பீரோவில் இருந்து கட்டுக்கட்டாக ரூ..32 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ளபெரிய வடுகபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக கண்ணன் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 1997-ம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். கண்ணன் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சார்ந்தவர். ஆனால் இவர் பட்டியல் இனத்தவர் என பொய் சொல்லி போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளார். இதுதொடர்பாக புகார் எழுந்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் நடத்திய விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆசிரியர் கண்ணன் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் […]
கர்நாடகாவில் பெருமழை பெய்து வருவதன் காரணமாக, காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்மட்டம் வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியில் இருந்து 76 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் தற்போது மேட்டூர் அணையின் முழுகொள்ளளவான 120 அடியை தற்போது எட்டியுள்ளது. இதன்காரணமாக 35,500 கன அடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சேலம், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி […]
கரூர் மாவட்டம் கேத்தம்பட்டியைச் சேர்ந்த பாண்டியின் மகள் முத்தரசி ஆவார்.இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார்.இவரது சகோதரி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வசித்து வருகிறார். இதனால் அவரை பார்க்க அடிக்கடி சென்று வந்துள்ளார்.அப்போது அவருக்கு அங்குள்ள பரத் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முத்தரசி மாயமாகியுள்ளார். இதன் காரணமாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை […]
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குளங்களை ஆக்கிரமித்ததாக எழுந்த புகாரின் பேரில் குளத்தின் ஆக்கிரப்பு பகுதிகள் அதிகாரிகளால் அகற்றப்பட்டது. இந்த குளம் ஆக்கிரமிப்பில் காட்டி கொடுத்ததாக கூறி, தந்தை வீரமலை, மற்றும் அவரது மகனான நல்ல தம்பியும் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக 6 பேர் சரணடைந்துள்ளனர். இந்த வழக்கில் சரியாக விசாரணை நடைபெறவில்லை என கூறி, ஆய்வாளர் பாஸ்கரனை சஸ்பெண்ட் செய்து டிஐஜி பாலகிருஷ்ணன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
கரூரில் உள்ள குளம் ஆக்கிரமிப்பை அடையாளம் காட்டியதற்காக தந்தை ராமன் மற்றும் அவரது மகன் நல்லதம்பி இருவரையும் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் 6 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகே உள்ள முதலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி ஆவார்.இவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது தோட்டத்தில் இருந்து பூக்களை பறித்துவிட்டு அதை ஸ்ரீரங்கம் சந்தையில் விற்பனை செய்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் திரும்பி வந்துள்ளார். அப்போது அவர் கீலமேடு பகுதியில் வந்துகொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளது. இதன் காரணமாக நல்லதம்பி சம்பவ இடத்திலேயே […]