சென்னை, கரூர், சேலம் மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், 3.14 கோடி பெண் வாக்காளர்கள், 3.03 கோடி ஆண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 7,758 பேர் உள்ளனர் என தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலை ஒப்பிடுகையில், சுமார் 17 .69 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் […]
கரூரில் ஆயுத பூஜையை முன்னிட்டு சாலையோர மைல்கல்லுக்கு படையலிட்டு பூஜை செய்த சாலை பணியாளர்கள். இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு, தொழிலாளர்கள், தாங்கள் பணிக்காக பயன்படுத்தும் பொருட்களுக்கு பூஜை செய்வது வழக்கம். அந்த வகையில், கரூரில் சாலை பணியாளர்கள் செய்துள்ள பூஜை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அருகே, புலியூர் – வையம்பட்டி மாநில நெடுஞ்சாலையில் பணிபுரியும் சாலை பணியாளர்கள், சாலையோர மைல் கல்லுக்கு படையலிட்டு, பூஜை செய்து ஆயுத பூஜையை கொண்டாடினர். சாலை […]
கடந்த 2021-22 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின் போது,தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்குவதற்கும்,மாணவர் சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கும்,விருதுநகர் மாவட்டம் – திருச்சுழி;கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர்;ஈரோடு மாவட்டம் – தாளவாடி;திண்டுக்கல் மாவட்டம் – ஒட்டன்சத்திரம்;திருநெல்வேலி மாவட்டம் – மானூர்;திருப்பூர் மாவட்டம் – தாராபுரம்;தருமபுரி மாவட்டம் – எரியூர்;புதுக்கோட்டை மாவட்டம் -ஆலங்குடி;திருவாரூர் மாவட்டம் – கூத்தா நல்லூர்;வேலூர் மாவட்டம்-சேர்க்காடு ஆகிய இடங்களில் புதியதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் […]
கரூரில் இன்று, திருமாநிலையூரில் ரூ.581 கோடி மதிப்பிலான 99 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவியேற்றது முதல், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று, முடிந்த நலத்திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். இந்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக கரூர் மற்றும் நாமக்கல்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், கரூரில் இன்று, திருமாநிலையூரில் […]
கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.3 கோடி ஊழல் என எழுந்த புகாரில் 4 பேர் பணியிடை நீக்கம். கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.3 கோடி ஊழல் என எழுந்த புகாரில் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நெஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சத்யபாமா, உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் பூபாலன் சிங், கரூர் கோட்டை கணக்கர் பெரியசாமி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சாலை போடாமல் போடப்பட்டதாக கூறி அதிகாரிகள் துணையுடன் பணத்தை முறைகேடு செய்ததாக […]
கரூர்:தலைக்கவசம் அணியாமல் வந்தால் அரசு அலுவலகங்களில் எந்தவித சேவையையும் பெற முடியாது என கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. வருகின்ற 18 ஆம் தேதி முதல் இரு சக்கரவாகனங்களில் அரசு அலுவலகங்களுக்கு வருபவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என கரூர் மாவட்ட அட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மாறாக, தலைக்கவசம் அணியாமல் வந்தால் அரசு அலுவலகங்களில் எந்தவித சேவையையும் பெற முடியாது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். குறிப்பாக,டாஸ்மாக் கடைகளுக்கு தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு மது பாட்டில் […]
கரூர் வியாபாரிகளிடம் தினசரி சுங்க வசூல் ரத்து என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு. சுங்க வசூல் ரத்து: கரூரில் 2000க்கும் மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகளிடம் வசூலிக்கப்பட்டு வந்த தினசரி சுங்க வசூல் ரத்து செய்யப்பட்டது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவை அடுத்து, தினசரி சுங்க வசூல் ரத்து செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கரூரில் தரைக்கடை வியாபாரிகளிடம் ஒப்பந்ததாரர்கள் டெண்டர் எடுத்து சங்க வசூல் செய்து வந்தனர். தேர்தல் வாக்குறுதி: வியாபாரிகளுக்கு சங்க வசூல் […]
கரூரில் சத்துணவு மையத்தில் குழந்தைகளுக்கு அழுகிய முட்டை வழங்கியதாக எழுந்த புகாரைத்தொடர்ந்து 3 பேர் சஸ்பெண்ட் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களும் மதிய உணவு மற்றும் முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் நாகனுரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட சத்துணவு முட்டைகள் அழுகி அதில் புழுக்கள் இருந்தததும், முட்டையில் ஒரு வித துர்நாற்றம் வீசியதையும் அடுத்து புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து சத்துணவு […]
புதிய வேளாண் கல்லூரி தொடங்குவதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், வேளாண் கல்வி மற்றும் வேளாண் ஆராய்ச்சியின் தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, வேளாண் நிதிநிலை அறிக்கையில் கிருஷ்ணகிரியில் புதிதாக அரசு தோட்டக்கலை தொடங்கப்பட்டது. வேளாண் கல்வியின் முக்கியத்துவம் கருதி 2021-22 ஆம் ஆண்டில் கரூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர், சிவகங்கை மாவட்டத்தில் […]
கரூரில் நெடுஞ்சாலை பகுதிகளில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை ‘தானியங்கி வேகமாணி கருவி’ மூலம் கண்டறிந்து அவர்களுக்கு கரூர் போக்குவரத்துக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். கரூர் மாவட்டம், மண்மங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலை இருக்கிறது. அந்த குறிப்பிட்ட பகுதியில் 40 கிலோமீட்டர் வேகத்திற்கு அதிகமாக செல்ல கூடாது என்கிற கட்டுப்பாடு இருக்கிறது. அந்த குறிப்பிட்ட வேகத்தை மீறி அதி வேகத்தில் செல்லக்கூடிய வாகனங்களை கண்டறிய புதியதாக “தானியங்கி வேகமானி” எனும் […]
கரூரில் மழை பெய்து வருவதால், 1-8 வகுப்புகளுக்கு மட்டும் இன்று பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பருவமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், கரூரில் மழை பெய்து வருவதால், 1-8 வகுப்புகளுக்கு மட்டும் இன்று பள்ளிகள் விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
கரூர் மாவட்டம், புலியூர் அருகே வெங்கடாபுரம் பகுதியில், தொடர் மழையின் காரணமாக ஆறுமுகம் என்பவரின் மண் சுவர் வீடு இடிந்து விழுந்ததில் அவரது 11 வயது மகன் சுனில் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதாலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டம், புலியூர் அருகே […]
வாகன சோதனையின் போது வேன் மோதி போக்குவரத்து அதிகாரி மரணம். கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக கனகராஜ் பணியாற்றி வருகிறார். அவர் இன்று காலை ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த வேன் நிற்காமல், அவர் மீது மோதி விட்டு உடனடியாக சென்று விதத்தில். இதில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட […]
கரூர்:பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக,அவர் படித்த தனியார் பள்ளியின் மீதுதான் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாக உயிரிழந்த மாணவியின் தாயார் கூறியுள்ளார். கரூரைச் சேர்ந்த பள்ளி மாணவி இரண்டு தினங்களுக்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அக்கடிதத்தில்,”பாலியல் வன்கொடுமையால் உயிரிழக்கும் கடைசி பெண்ணாக நானாகத்தான் இருக்க வேண்டும். எனக்கு யார் இந்த கொடுமையை செய்தார்கள் என்று வெளியே சொல்ல பயமாக உள்ளது’,என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து,கரூர் பள்ளி மாணவி உயிரிழந்த […]
கரூரில் பாலியல் தொல்லையால் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை. கரூர் : கரூர் மாவட்டம், வெண்ணெய் மலையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி, அதே பகுதியில் அருகாமையில் வசித்து வருகிறார். இந்த நிலையில்,அந்த மாணவி நேற்று மாலை மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை மீட்ட […]
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கரூரை சேர்ந்த 40 வயது நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கரூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கரூரில் கடந்த 2019-ஆம் ஆண்டு பள்ளி சென்று வீடு திரும்பிய மூன்றாம் வகுப்பு படிக்க கூடிய சிறுமியை 40 வயதான சரவணன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக கரூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நசீமா பானு, குற்றவாளிக்கு […]
கரூரில் உள்ள வள்ளுவன் பெட்ரோல் பங்கில் 20 திருக்குறள் சொன்னால் பொங்கல் திருநாள் ஜனவரி 15 முதல் ஏப்ரல் 31 வரை 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பெட்ரோல் பங்கில் கூட்டம் குவிந்து வருகிறது. தமிழின் பெருமை நிலைக்க வேண்டும் என்பதற்காகவும், கற்றறிந்தவர்களுக்கு அடிக்கடி நினைவூட்டுவதற்காகவும் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள சில சான்றோர்கள் போட்டிகள் நடத்துவது போல தமிழுணர்வை ஊக்குவிப்பது சில நேரங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது […]
கரூர் நகராட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியை பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் மறுப்பதாக எம்பி ஜோதிமணி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். கரூர் நகராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நதியை பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் மறுப்பதாக எம்பி ஜோதிமணி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அதிகாரிகள் இதற்கான பதில் சொல்லும் வரை நான் நகர மாட்டேன் என நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சொல்வதற்கெல்லாம் தலையாட்ட நான் ஒன்றும் கைநாட்டு எம்பி அல்ல எனவும் அதிகாரிகளுடன் எம்பி ஜோதிமணி […]
குளித்தலை திமுக எம்.எல்.ஏ ராமருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரானா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. தற்பொழுது வரை ஏறக்குறைய மூன்று லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில்தான் உள்ளது. தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலையில் உள்ள திமுக எம்எல்ஏ இராமருக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
நேற்று இந்திய அளவில் வெளியாகிய சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில் 559 ஆவது இடம் பிடித்து தேர்வில் அசத்தி இருக்கிறார் அபிநயா எனும் விவசாய குடும்பத்தை சேர்ந்த கரூர் மாணவி. நேற்று இந்திய அளவில் வெளியாகிய சிவில் சர்வீஸ் தேர்வில் 559 ஆவது இடம் பிடித்து அசத்தியிருக்கிறார் அபிநயா. கரூர் மாவட்டத்தில் பரமத்தி எனும் முன்னூர் ஊராட்சியை சேர்ந்தவர் தான் அபிநயா. இவரது தந்தை ஒரு விவசாயி. ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பதற்காக பல முறை சிவில் […]