முன்னாள் அமைச்சரும் டிடிவியின் ஆதரவாளரருமான செந்தில் பாலாஜி கைது
கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். டிடிவி தினகரன் தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சாலை மறியலில் ஈடுப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் 47 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.