நேற்று இரவு முதல் விடிய விடிய கரூர் அருகே உள்ள கோழிப்பண்ணையில் வருமான வரித்துறை சோதனை!
நேற்று இரவு முதல் விடிய விடிய கரூர் அருகே கோழிப்பண்ணை ஒன்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூரை அடுத்த தாளவாய்புரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் அப்பகுதியில், சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். அந்த கோழிப்பண்ணைக்கு நேற்று நள்ளிரவு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு மற்றும் முறையாக ஆவணங்களைப் பராமரிக்காததது ஆகிய புகார்களின் பேரில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய நடத்தப்பட்டு வரும் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில் கோழிப்பண்ணை உரிமையாளர் ராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.