கரூர்: நிலமோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2 நாள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலி பத்திரங்கள் மூலம் அபகரிப்பு செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கரூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது, அண்மையில் காவல்துறையினரிடம் இருந்து […]
கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவருக்காக நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் தேன்மொழி தியாகராஜன் வெற்றி. கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் 5வது வார்டு உறுப்பினர் திமுக வேட்பாளர் தேன்மொழி தியாகராஜன் வெற்றி என அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் முடிவை வெளியிடலாம் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் உத்தரவை தொடர்ந்து தேர்தல் முடிவை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர். கடந்த டிச19ம் […]
கரூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தல் முடிவுகளை வெளியிடலாம் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பர் 19ஆம் தேதி கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல் நடைபெற்றது. அப்போது, அதிமுகவை சேர்ந்த திருவிக என்பவர் கடத்தப்பட்டதாகவும், இந்த தேர்தலில் திமுக முறைகேடாக செயல்பட்டதாகவும், தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது எனவும் அந்த மனுவில் குறிப்பிடபட்டு இருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் […]
கரூரில் மனநலம் பாதிக்கப்பட்டு, அரைநிர்வாணமாக திரிந்த ஒரு முதியவரை சாமியார் என கூறி மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதிவர் ஒருவரை சித்தர் என கூறி அங்குள்ளவர்கள் வணங்கி வந்துள்ளனர். காணிக்கையையும் அளித்து வந்துள்ளனர். இதில் ஒரு கும்பல், இவருக்கு கோவில் காட்டுவதாக கூறியும் காணிக்கை வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்து , கரூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து, அந்த முதியவரை […]
கரூர் குளித்தலையில் பயிர்க்கடன் வாங்காத 244 விவசாயிகளுக்கு கடன் பெற்றதாக தகவல் சென்றுள்ளது. மேலும், இறந்தவர் ஒருவரும் கடன் வாங்கியதாக தவறுதலாக பதியப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை துணை பதிவாளர் அலுவலகத்தில் இருந்து, பயிர்க்கடன் பெறாத 244 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் பெற்றதாகவும், அதற்கான விசாரணைக்கு நேரில் வர வேண்டும் எனவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மன்னில் மேலும் ஒரு குளறுபடி என்னவென்றால், திருச்சி மாவட்டம் போதவூரை சேர்ந்த தவசு என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டே உயிரிழந்துவிட்டார். ஆனால், […]
விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மாநகராட்சியின் நகரமைப்பு ஆய்வாளர் தங்கமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கரூர் செல்லாண்டிபாளையம் பகுதியில் வீடு கட்டுமான பணி நடைபெற்று வரும்போது கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்தபோது விஷவாயு தாக்கி சிவா, மோகன்ராஜ் உள்ளிட்ட 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விஷவாயு தாக்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலர், டிஜிபி ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என கூறி தேசிய மனித உரிமை […]
கட்டடம் கட்டும் போது செப்டிக் டேங்கில் இருந்து விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த சம்பந்தப்பட்ட கட்டடம் முழுதாக இடிக்க கரூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கரூர் மாவட்டம் சுக்காலியூர், காந்தி நகர் பகுதியில் குணசேகரன் என்ற வழக்கறிஞர் வீடு கட்டி வந்துள்ளார். அப்போது செப்டிக் டேங்க் கட்டி முடிக்கப்பட்டு , அதன் உள்ளே இருக்கும் சவுக்கு கம்புகளை அவிழ்க்க, உள்ளே சென்ற தொழிலாளர்கள் 4 பேர் உள்ளே விஷ […]
கரூரில் விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. கரூர் செல்லாண்டிபாளையம் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். செல்லாண்டிபாளையம் பகுதியில் வீடு கட்டுமான பணி நடைபெற்று வரும்போது கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்தபோது விஷவாயு தாக்கி சிவா, மோகன்ராஜ் உள்ளிட்ட 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொழிலாளி கோபால் என்பவர் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து, விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் […]
கரூரில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு. கரூர் செல்லாண்டிபாளையம் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். செல்லாண்டிபாளையம் பகுதியில் வீடு கட்டுமான பணி நடைபெற்று வரும்போது கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்தபோது விஷவாயு தாக்கி சிவா, மோகன்ராஜ் உள்ளிட்ட 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.