வெற்றி பெற்ற மத்திய அமைச்சர் .’சொன்னார் பொன்னார்’ ‘செய்தார் எடப்பாடி..!!
நாகர்கோவில்:
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் சபாநாயகர் தனபால் முன்னிலையில் தற்போது நடந்துவரும் நிகழ்ச்சியில் முதல்வர் பழனிச்சாமி தற்போது பேசினார்.
அதில், எல்லைககளின் மறு சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் நகர்கோவில் மாநகராட்சியாக மாற்றப்படும் என்று கூறினார். ஏற்கனவே தமிழகத்தில் 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில் தற்போது 13 வது மாநகராட்சியாக நாகர்கோவில் ஆக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முதல்வர் பழனிச்சாமியை நேரில் சந்தித்து நாகர்கோவிலை மாநகராட்சியாக அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது முதல்வர் எடப்பாடி நாகர்கோவில் மாநகராட்சியாக அறிவித்துள்ளார்.இதனால் சொன்னார் பொன்னார் , செய்தார் எடப்பாடி என்று ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
DINASUVADU