கருங்கல்:பபிதா ஸ்வீட்டி இவர் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் .இவர் இன்ஜினியரிங் படித்துள்ளார். தற்போது நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சிதறால் பகுதியை சேர்ந்த ஏசி மெக்கானிக் ஆஸ்பின். பபிதா ஸ்வீட்டி வேலை பார்க்கும் நிறுவனத்தில் உள்ள ஏசியை பழுது பார்க்க வந்தபோது, இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது.பபிதா ஸ்வீட்டியின் பெற்றோருக்கு காதல் விவகாரம் தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.பபிதாவிற்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதற்கிடையே கடந்த 31ம்தேதி பபிதா ஸ்வீட்டி திடீரென வீட்டில் இருந்து காணமல் போனார்.
இதனை தொடர்ந்து அவரது பெற்றோர் பபிதாவை எங்கு தேடியும் பயனில்ல்லை.பின்னர் இது குறித்து அவரது தாயார் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலிசார் வழக்குபதிவு செய்து பபிதா ஸ்வீட்டியை தேடும் பணியில் இடுபட்டனர்.. போலீசார் தேடுவதை அறிந்த பபிதா ஸ்வீட்டி நேற்று முன்தினம் இரவு காதலனுடன் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வந்து சேர்ந்தார்..காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு சென்றதாகவும் தாங்கள் திருமணம் செய்ய விரும்புகிறோம் என்றும் கூறினர்,அதன் பின் போலிசார் அவரது பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். காதலனை கைவிடுமாறு பபிதா ஸ்வீட்டியை தாயார் கேட்டுக் கொண்டார். ஆனால் தாயாரின் கோரிக்கையை அவர் ஏற்க மறுத்து விட்டார்.அதன் பின் போலிசார் இருவரும் திருமணம் செய்து சரியான சான்றிதல்களை கொடுக்கவேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…