கடந்த நவம்பர் மாத இறுதியில் ஒகி புயல் கன்னியாகுமரி, கேரளா, லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளைப் புரட்டிப்போட்டது. புயலின்போது மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் இன்றுவரை வீடு திரும்பவில்லை. ஒகி புயல் தாக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் கன்னியாகுமரி மாவட்டத்தை ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்கவும், உரிய நிவாரணம் வழங்கவும் கேரளா மற்றும் தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தன.
இந்தச் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரம், லட்சத்தீவு, கன்னியாகுமரி பகுதிகளில் ஒகி புயல் பாதிப்புகளை இன்று பார்வையிடுகிறார். தற்போது லட்சத்தீவுப் பகுதியை பார்வையிடச் சென்றுள்ள மோடி, இன்று மதியம் 2.30 மணியளவில் கன்னியாகுமரி வருகிறார். மோடியை வரவேற்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் காலையில் கன்னியாகுமரி வர இருக்கிறார்கள்.
source: dinasuvadu.com
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…
கேரளா : பராசலாவை அடுத்த மூறியன்கரை பகுதியை சேர்ந்த இளைஞர் ஷாரோன் ராஜ் என்பவருக்கு அவரை காதலித்து வந்த கிரிஷ்மா கடந்த…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து அப்பகுதியில் 2வது விமான நிலைய முனையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய…