கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் அருகே நாகம்பாறைவிளையை சேர்ந்த விபின் (26). இவருடைய மனைவி அனிலா (23). இவர்கள் காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர் . சம்பவத்தன்று இவர்கள் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு அது அடி உதையாக மாறியது.பின்பு விபின் கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றார்.இதனால் மனமுடைந்த அனிலா தன்னுடைய உடலில் தீ வைத்துக் கொண்டு இறந்து போனார். அதை தொடர்ந்து அனிலாவின் உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.ஆனால் அனிலாவை தற்கொலைக்கு துாண்டியதாக விபினை கைது செய்து […]
நாகர்கோவில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவ, மாணவிகளின் வசதிக்காக இலவச வைபை வசதி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக விஜயகுமார் எம்.பி. கூறினார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.43 லட்சம் செலவில் முதியோர்களுக்கான தனி சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது. பழைய கட்டிடத்தை புதுப்பித்து, இந்த சிகிச்சை பிரிவு அமைத்துள்ளனர். இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். புதிய சிகிச்சை பிரிவை விஜயகுமார் எம்பி திறந்து வைத்து […]
கன்னியாகுமரி ரட்சகர் தெருவை சேர்ந்தவர் ரிச்சர்ட் (வயது 25), இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் சவுதி அரேபியாவில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிச்சர்ட் சக மீனவர்களுடன் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மீன்பிடி வலையின் கயிறு கை விரலில் சுற்றி கையில் ஒரு விரல் துண்டானது. இதனால் அவர் வெளிநாட்டில் இருந்து சிகிச்சைக்காக சொந்த ஊருக்கு கன்னியாகுமரிக்கு வந்தார். இங்கு வீட்டில் இருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த. […]
நாகர்கோவிலில் துணிகரம்: வீட்டில் பணம், செல்போன் திருடி விட்டு மர்ம நபர் ஓட்டம் நாகர்கோவில், நாகர்கோவில் வட்டக்கரையை பகுதியை சேர்ந்தவர் அலோசியஸ் (வயது 54), இவர் அங்கே கேட்டரிங் வேலை செய்து வருகிறார். இவரும், இவருடைய மகள் ரேச்சல் (24) என்பவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் குதித்து தூங்கிக் கொண்டு இருந்த ரேச்சல் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர். இதனால் […]
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே வைராகுடியிருப்பை சேர்ந்த ராஜன், இவர் ஆட்டோ டிரைவர் இருந்து வருகின்றார் . இவருடைய மகன் ஆரோன் (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் ஆரோன் நண்பர்களுடன் விளையாட செல்வதாக கூறிவிட்டு சென்றார். மாலை ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த ராஜன் குடும்பத்தினர் , சக நண்பர்களிடம் விசாரித்தார்.அப்போது,ஆரோன் பண்ணையூர்பாலம் அருகே பொழிமுகம் பகுதியில் ஆற்றில் […]
வரும் 25 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆனால் கேரள மாநிலத்தில் மழை பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு அரசு சார்பில் நடத்தப்படும் ஓணம் பண்டிகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 25 ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே அறிவிப்பு வெளியிட்டுள்ளார். DINASUVADU
ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 25 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார் மழை பாதிப்பு காரணமாக கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு அரசு சார்பில் நடத்தப்படும் ஓணம் பண்டிகை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. DINASUVADU
கன்னியாகுமரியில் தூண்டில் வளைவு அமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ,கன்னியாகுமரியில் குழித்துறை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் தடுப்பணை கட்டுவதற்காக ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் C.S.I மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்திலிருந்து தீக்காயங்களுடன் சிறுமி மீட்க்கப்பட்டுள்ளார் நேற்று அங்குள்ள குழந்தைகளுக்கு சூடுவைத்து கொடுமைப்படுத்துவதாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில் அதிரடியாக காப்பகத்தில் அதிகாரிகள் நுழைந்தனர்.இவர்கள் வருவதை பார்த்துக்கொண்டு அங்கு வேலைசெய்பவர்கள் இவர்கள் வருவதை தெரிந்து கொண்டு குழந்தைகளை ஒரு அறையில் வைத்து அடைத்தனர் . குலந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அவர்களை கண்டுபிடித்த அதிகாரிகள் அங்கு 17 வயது சிறுமியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் அந்த சிறுமியின் […]
பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுப்பணித்துறை அறிவுரை
கன்னியாகுமரி அருகே மகளிர் நீதிமன்றம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. கன்னியாகுமரி அருகே கீரிப்பாறை பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தில் கைதான குற்றவாளி ராஜேஷுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கன்னியாகுமரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கன்னியாகுமரி அருகே ரயிலில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் வந்த அஹமதாபாத் ரயிலில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரயிலில் இருந்து கஞ்சா பொட்டலம் மீட்கப்பட்டது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கன்னியாகுமரியில் அருகே கோழிப்பண்ணை அதிபர் வெட்டிக்கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகர்கோவில் வடக்கு நுள்ளிவிளையை சேர்ந்த கோழிப்பண்ணை அதிபர் மைக்கேல் வெட்டிக்கொலை செய்த வழக்கில் அனீஸ் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது நாகர்கோவில் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கன்னியாகுமரியில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஒத்துழையாமை போராட்டம் நடத்தி வருகின்றனர்.அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி காளிகேசம், கீரிபாறை உள்பட 9 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி அருகே திருவிதாங்கோடில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு பள்ளி ஆசிரியர் மீது புகார் எழுந்துள்ளது.பின்னர் இந்த புகாரை அடுத்து அரசு பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் ஆவேசத்தில் ஈடுபட்ட்டனர்.பின்னர் பெற்றோர்களின் தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர் செல்லத்தை போலீசார் மீ்ட்டு, கைது செய்தனர்.
கடலோர பாதுகாப்புப் படையினர் ,கன்னியாகுமரி, தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில், தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுப்பதற்கான பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொண்டுள்ளனர். குமரி கடலோரப் பகுதியான ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையில் சஜாக் ஆபரேஷன் (SAJAG) என்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலிஸாரும், தமிழக கடலோர பாதுகாப்பு படையும் இணைந்து இந்த ஒத்திகையை நடத்தி வருகின்றனர். இதேபோல், தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் குமரி வரையிலான கடலோரப் பகுதியிலும் சஜாக் ஆபரேஷன் எனப்படும் இந்த […]
2011ம் ஆண்டு கன்னியாகுமரி அருகே திருவிதாங்கோட்டில் பாத்திமா என்பவரை அவரது கணவர் சாகுல்ஹமீது தீ வைத்து கொன்றார். இந்த வழக்கை விசாரித்த நாகர்கோவில் மகளிர் நீதிமன்றம் சாகுல்ஹமீதுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திராவிடத் தமிழர் கட்சி சார்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். காந்தி காலனி மற்றும் தோவாளை தாலுகா காஞ்சா நகர் பகுதிமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்ட வழங்க வேண்டியும். இருளப்பபுரம் அருந்ததியர் மக்களுக்கு சமுதாய நல கூடம் கட்டிதர கோரி பல போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தை கண்டித்து திராவிடத் தமிழர் கட்சியினர் கண்ணில் கருப்பு துணி கட்டி நூதன முறையில் மனு அளித்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கூலித் தொழிலாளி கொடூரமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில்நிலையம் அருகே கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாகோடு தேனாம்பாறை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ஸ்டான்லி ஜோன்ஸ், குழித்துறை மேற்கு ரயில்நிலையம் அருகே உள்ள தோட்டத்தில், கழுத்து அறுக்கப்பட்டும், மார்பில் ஆழமாக குத்தப்பட்டும் சடலமாகக் கிடந்துள்ளார். உடலைச் சுற்றி மதுக்குப்பிகள் கிடந்ததால், கொலை செய்யப்படும் முன்னர் ஸ்டான்லி ஜோன்ஸ் சிலருடன் சேர்ந்து மது அருந்தி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஸ்டான்லி ஜோன்சுக்கு […]