கன்னியாகுமரி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தாழாக்குடி, வெள்ளமடம், செண்பகராமன் சுற்று வட்டார பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசு மாடுகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 35 வருடங்களுக்கு பிறகு தற்போழுது இப்பகுதியை சேர்ந்த பசு மாடுகள் மற்றும் கன்றுகளை கோமாரி நோய் தாக்கியுள்ளது. இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பசுகள் மற்றும் கன்றுகள் இறந்திருப்பதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் […]
குமரி மாவட்டத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இருவர் உளவு பார்த்துள்ளனர். இவர்கள் இருவரையும் மற்றும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களையும் கைது செய்ய கோரி தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் வலியுறுத்தி பா.ஜ.காவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். இந்நிலையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் உருவ பொம்மையை எரித்துள்ளனர். அப்போது அருகில் இருந்த பாஜக தொண்டர் ஒருவர் மீது தீ பிடித்ததால் உடனடியாக தீயை அணைத்தனர். மேலும் அப்பகுதியில் பரபரப்பு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஓகி புயல் வந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயல் பல உயிர்களையும், உடைமைகளையும் காவு வாங்கியுள்ளது. இந்நிலையில், புயல் பாதிப்பு ஏற்பட்டு ஒரு வருடம் ஆகியுள்ளது. இதனையடுத்து குமரி மாவட்டம் சின்னத்துறையில் மக்கள் பாதை அமைப்பு சார்பாக ஓகி புயலின் ஓராண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் அமீர், ஓகி புயல் ஆவண பட இயக்குனர் திவ்ய பாரதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் மழை குறைந்ததால் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டுகிறது. இதனால், அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், விடுமுறை நாளான இன்று திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. மேலும் சிறுவர் பூங்கா, நீச்சல் குளம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் பொழுதை கழித்து சென்றனர்.
நாகர்கோவிலில் போலி ஐ.டிக்கள் மூலம் ரயில் டிக்கெட் விற்பனை செய்தவரை ரயல்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், போலி ஐ.டிக்கள் மூலமாக, அதிகளவில் ஆன் லைன் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில், ரயில்வே போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நாகர்கோவிலை சேர்ந்த பிரகாஷ் என்பவர், 15 க்கும் மேற்பட்ட போலி ஐ.டிக்கள் உருவாக்கி, ரயில் டிக்கட் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, அவரை கைது செய்த ரயில்வே […]
குமரி மாவட்டத்தில் கல்லூரி காவலாளியாக இருந்த பைக் மோதி உயிரிழந்துள்ளார். குமரி மாவட்டம் நித்திரைவிலை அருகே சின்னத்துறை புனித ஜுட்ஸ் காலனியை சேர்ந்தவர் ஆன்றனி, இவருக்கு வயது 59. இவர் தூத்தூரில் உள்ள கல்லூரியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். ஞாயிறுகிழமை அன்று இவர் கடைக்கு சென்ற பொது எதிரே வந்த பைக் இவர் மேல் மோதியதில் பலத்த காயமடைந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இவர் திங்கற்கிழமை உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று நடைபெறவிருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கபட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று நடைபெறவிருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மேலும் ஒத்திவைக்கப்பட்ட இன்றைய தேர்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் துணைவேந்தர் பாஸ்கர் தெரிவித்துள்ளார். DINASUVADU
கேரள அரசை கண்டித்து இன்று கன்னியாகுமரியில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், சபரிமலைக்கு செல்லும்போது மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை கேரள அரசு அவமதித்துள்ளது. கேரள அரசை கண்டித்து இன்று கன்னியாகுமரியில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும். பக்தர்களை பாதுகாக்கும் நடவடிக்கை, தடுக்கும் நடவடிக்கையாக இருக்கக்கூடாது.கஜா புயல் பாதிப்பிலிருந்து […]
அகில உலக மீனவர் தினத்தை முன்னிட்டு குமரியில் சிறப்பு திருப்பலிக்கு நடைபெற்றது. அகில உலக மீனவர் தினத்தை முன்னிட்டு குளச்சல் மீன்பிடி துறைமுக நடவடிக்கை குழு சார்பில் உலக மீனவர் தின திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலியை முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி நடத்தினார். அதன் பின் புனித நீர் ஊற்றி மீன்பிடி கருவிகளையும், கடலையும் அர்ச்சித்தார். இந்த திருப்பலியில் அனைத்து மீனவ பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கள்கிழமை அன்றும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் இதனை அடுத்து அனைத்து பொதுமக்களும் கலந்துகொண்டனர். இந்நிலையில் கருங்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாங்குழி என்ற பகுதியில் புதிய டாஸ்மாக் கடைகள் அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து அந்தப்பகுதியில் பள்ளிச்செல்லும் மாணவ மாணவிகளுக்கு அது இடையூறாக இருக்கும் என்பதால் அந்த டாஸ்மாக் கடை அமைப்பதற்கு அனுமதி வழங்க கூடாது என மக்கள் மனு அளித்துள்ளனர்.
குமரி மாவட்டம் கண்டன்விளை பள்ளிசால்விலையை சேர்த்தவர் தங்கவேல் (45). இவருக்கு ஒரு மகனும், மகளும் இருந்தனர்.இந்நிலையில் கடந்த வருடம் அவரது மகள் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மனம் உடைந்த நிலையில் இருந்த தங்கவேல், இந்த சம்பவம் நடந்து சில நாட்களாக யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். இதனையடுத்து அவரது உறவினர் ஆறுதல் சொல்லி தேற்றி உள்ளனர். இதனையடுத்து இந்த வருடம் அவரது மகள் இறந்த தினத்தன்று வெளியில் சென்ற தங்கவேல் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. தங்கவேல் உறவினர்கள் அவரை […]
குமரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை. கஜா புயல் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து குமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனையடுத்து குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. வடசேரி சின்னராசிங்கன் தெருவில் மழை முந்நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியை வர முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் கரையைக் கடந்து சேதம் ஏற்படுத்திய கஜா புயல், அரபிக் கடல் நோக்கிச் செல்கிறது. இதன் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.நேற்று முன்தினம் மாலை நாகர்கோவிலில் சுமார் 1 மணி நேரமாக கனமழை பெய்தது. இதனால் கோட்டார், செம்மாங்குடி ரோடு, கே.பி. ரோடு, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இரவும் விட்டு விட்டு மழை பெய்தது.
குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே அருமநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கபிரியேல் (82). இவருக்கு ஆஸ்துமா தொல்லை இருந்து வந்த நிலையில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் மருந்து குடிப்பதற்காக மருந்து பாட்டிலை தேடியுள்ளார். அந்த நேரம் மின்தடை ஏற்பட்டுள்ளது. அவர் தடவி தடவி ஒரு மருந்து பாட்டிலை எடுத்து குடித்துள்ளார். அது வயலுக்கு தெளிக்க கூடிய போச்சி கொல்லி மருந்தாம். இதனையடுத்து இவருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் சிகிச்சை […]
குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டத்தில் ரூ.220 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இது மக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் பார்வைக்காக மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
நாகர்கோவில் கோட்டாரைச் சேர்ந்தவர் சுனில்ராஜ் (வயது 30). இவர் செட்டிக்குளத்தில் பழைய மோட்டார்சைக்கிள்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.நேற்று இவரது கடைக்கு டிப்-டாப் ஆடை அணிந்த நபர் ஒருவர் வந்தார். ஒரு மோட்டார்சைக்கிள் தனக்கு தேவைப்படுவதாக அவர் சுனில்ராஜிடம் தெரிவித்தார். அவரும் மோட்டார்சைக்கிளை தேர்வு செய்து கொள்ளுமாறு கூறினார். உடனே அந்த நபர் 30 நிமிடத்துக்கும் மேலாக மோட்டார்சைக்கிள்களை சுற்றி, சுற்றி வந்து பார்த்தார். இறுதியில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புல்லட் மோட்டார்சைக்கிளை தேர்வு […]
கன்னியாகுமரி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை திமுக கூட்டணி கட்சிகள் இணைந்து சந்திக்க முடிவு செய்துள்ளன. இதுகுறித்து ஆலோசிப்பதற்காக அவசரக் கூட்டம் ஒழுகினசேரியில் உள்ள குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெறாது. இக்கூட்டத்திற்கு திமுக மாவட்ட செயலர் சுரேஷுராஜன் எம்.எல்.ஏ தலைமை வகித்தார்.
நாகர்கோவில் குமரி காலனியில் குடியிருப்பு மற்றும் விளை நிலங்களை சேதம் செய்வதாக வேல்ஸ் ஜிம் என்பவர் மீது பொதுமக்கள் நீண்ட நாட்களாக புகார் அளித்து வருகின்றனர். நீண்ட நாட்களாக போலீசாரிடம் மக்கள் குற்றசாட்டு தெரிவித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, காவல் மற்றும் நீதித்துறை மூலம் தீர்வு கிடைக்காததால் ஆட்சியர் வீட்டிற்கு முன்பாக பொதுமக்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
வருகிற 2019ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் முதலீட்டை ஈர்க்கும் வகையில், இவர்களுக்கான ஊக்குவிப்பு கூட்டமானது, ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டமானது, இன்று குமரி மாவட்டத்தில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.