கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டிருந்தது. அதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையும் அடங்கும். தற்போது, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 7 மாதங்களுக்கு பின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை இன்று முதல் கொரோனா கட்டுபாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டுள்ளது. அரண்மனைக்கு வரும் சுற்றுலா […]
பெங்களூரிலிருந்து கடத்தப்பட்ட 5 வயது பெண் குழந்தை கன்னியாகுமரியில் போலீஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள வெள்ளையம்பலத்தை சேர்ந்த ஜோஸப் ஜான் மற்றும் அவரது மனைவி எஸ்தர் ஆகிய இருவரும் பெங்களூரில் இருந்து ஐந்து வயது பெண் குழந்தையை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கடத்தி வந்துள்ளனர். குழந்தையை வைத்துக்கொண்டு கையில் மற்றொரு சிறுவனுடன் இவர்கள் இருவரும் சுற்றி திரியும் பொழுது அப்பெண் குழந்தை அழுகையை நிறுத்தாமல் அழுது கொண்டே இருந்ததால் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு […]
சொத்துக்காக 82 வயது மூதாட்டியை வீட்டினுள் அடைத்த வைத்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரியில் உள்ள வெண்டலிகோடு பகுதியை சேர்ந்தவர் கமலாபாய்(82). இந்த மூதாட்டி மகள் விமலா சாந்தா என்பவருடன் தனியாக வசித்து வந்தார். 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருந்தாலும், வீட்டில் முடங்கிக் கிடக்க விரும்பாத காரணத்தால் விமலா சாந்தா கிரஷர் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். சில நாட்கள் வேலைக்கு சென்று கொண்டிருந்த விமலாவால் தொடர்ந்து உடல்நலக்குறைவு காரணமாக செல்ல முடியாமல் போய் […]
மறைந்த வசந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கன்னியாகுமரி தொகுதி எம்.பியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக இருந்த H.வசந்தகுமார் கடந்த 10-ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுவந்த நிலையில், சிகிக்சை பலனின்றி H.வசந்தகுமார் உயிரிழந்தார். வசந்தகுமாரின் மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் சினிமா பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். மறைந்த வசந்தகுமாரின் உடல் சொந்த ஊரான கன்னியாகுமரி […]
ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கேரளாவில் எல்லா வருடமும் விமர்சையாக கொண்டாடப்படும் பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்று ஓணம். இந்த வருடம் கொரோனா பாதிப்பு காரணமாக பல கட்டுபாட்டுகளை அரசாங்கம் விதித்துள்ளது. ஆம் வீடுகளில் மட்டும் ஓண விழாவை கொண்டாட வேண்டும் என்றும் , பொது இடங்களில் ஓணம் நிகழ்ச்சிகளை நடத்த கூடாதும் என்றும் கூறி கேரள அரசு தடை விதித்துள்ளது. […]
நாகர்கோவிலில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள வெட்காளியம்மன் எனும் கோவிலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பூஜையை முடித்துவிட்டு பூசாரி கதவை பூட்டி விட்டு சென்றுள்ளார். மறுநாள் காலையில் வந்து கோவிலை திறந்த போது அங்கு முன் பக்கம் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பூசாரி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். […]
நாகர்கோவிலில் யூதிஷா என்ற மாணவி 230 திருக்குறள்களை 3 நிமிடம் 25 விநாடிகளில் ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளார். நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலகசாதனைக்காக நிர்ணயிக்கப்பட்ட 5 நிமிடங்களில் அதிவேகமாக திருக்குறள்களை ஒப்புவிக்கும் போட்டி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் முன்னிலையில் நடைபெற்ற இந்த போட்டியில் யூதிஷா என்ற மாணவி 230 திருக்குறள்களை 3 நிமிடம் 25 விநாடிகளில் ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளார். […]
கன்னியாகுமரியில் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து பலியான பிரதீப் அஸ்வின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீண்டகரை-பி கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி கடல்சீற்றம் நடந்தது. அப்போது கடல்நீர் ஊருக்குள் புகுந்த போது, அப்பகுதியில் உள்ள மரியதாஸ் என்பவருடன் வீட்டு காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்துள்ளது. சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்த மரியதாஸின் மகன் பிரதீப் அஸ்வின் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். […]
கன்னியக்குமரி மாவட்டத்தில் மேலும் 228 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிக கவலையளிக்கின்ற வகையில் அதன் பாதிப்பு இருந்து வரும் நிலையில் அதன் தாக்கம் அனைத்து மாவட்டங்களிலும் எதிரொளிக்கிறது.அவ்வாறு கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் இன்று மேலும் 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதன்படி இம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 2224 ஆக உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரியில் விடிய விடிய பெய்த மழையால், அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு. கடந்த சில காலங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், தற்போது பருவமழை துவங்கியுள்ள நிலையில், அங்கங்கு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியுள்ளது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், அதிகபட்சமாக இரணியில் 9 செ.மீ. குருந்தன்கோடு, நாகர்கோவில், மாம்பழத்துறையாரில் 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட காசிக்கு 6 நாட்கள் போலீஸ் காவல். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள காசி என்பவர், சமூக வலை தளங்களில் உள்ள பெண்களை குறிவைத்து காதலிப்பது போல் நடித்து அவர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, இவர் மீது 5 பெண்கள் உட்பட 6 பேர் புகார் அளித்திருந்த நிலையில் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டார். பின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட […]
கன்னியாகுமரியில் மது அருந்தியவர் போலீசாரை கண்டு ஓடிய பொது வீட்டு கதவின் கம்பியில் சிக்கியதால், அவரை தீயணைப்பு துறையினர் மீட்டு உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள செட்டித்தெரு பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் மது அருந்திவிட்டு நண்பருடன் கைதைத்து கொண்டு தெருவில் நின்றுள்ளார். அப்பொழுது அங்கு போலீஸ் வந்ததால், அந்த இடத்தை விட்டு ஓடியுள்ளார். கதவு உள்புறமாக பூட்டி இருப்பதை அறியாமல் திறக்க முயன்றபோது கம்பிகளில் சிக்கியுள்ளார். பின் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் கம்பிகளை வெட்டி, […]
நாகர்கோவிலை சேர்ந்த காசி மீது தற்பொழுது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலில் வசித்து வரும் காசி எனும் சுஜித் பல பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி, ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து வைத்து மிரட்டுவதாக பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து, அவர் கந்து வட்டி வாங்கிருப்பதாகவும், மேலும் பலரை ஏமாற்றி இருப்பதாகவும் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இந்த காசி […]
பெண்களை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகர் கோவிலை சேர்ந்த காசியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினருக்கு மகளீர் நீதிமன்றம் உத்தரவு. தனது இணையதள பக்கங்களில் கவர்ச்சியான தனது சிக்ஸ் பேக் கொண்ட புகைப்படம், பணபலம் ஆகியவற்றை பயன்படுத்தி பெண்களை மயக்கி நல்லவன் போல நடித்து மாட்டிக்கொண்டவர் தான் நாகர் கோவில் பகுதியை சேர்ந்த காசி. இவரது உண்மை தன்மை அறிந்த மருத்துவம் பயின்றுள்ள காதலி காவல் துறையினருக்கு புகார் அளிக்கவே, வரிசையாக […]
பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டுள்ள நாகர்கோவில் காசி மீது மேலும் ஒரு கந்துவட்டி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற சுஜித் எனும் இளைஞன் தன்னுடைய அழகாலும் சமூக வலைதள பலத்தையும் கொண்டு பல பெண்களை காதலிப்பதாகக் கூறி அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வைத்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இது தொடர்பாக அண்மையில் தைரியமாக அவரை காதலித்து வந்த பெண் மருத்துவர் ஒருவர் போலீசில் புகார் அளித்திருந்தார். […]
கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு பல உயிர்களை காவு வாங்கியுள்ள நிலையில், உயிழப்பவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுவதுண்டு. இந்நிலையில், கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மூன்று பேருக்கும் ‘கொரோனா’ தொற்று பாதிப்பு இல்லை என்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.
க ன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மரியஜான். இவருக்கு வயது 66 .இவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வந்த நிலையில் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு திரும்பியுள்ளார். இதனால் கொரோனா அச்சம் காரணமாக இவர் வீட்டில் தனிபடுத்தப்பட்டிருந்தநிலையில் அவருக்கு தொடர்ந்து இருமல், காய்ச்சல் இருந்ததால் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் […]
கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இயங்கிவரும் கொரோனா சிறப்பு வார்டில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்று காலை உதயகுமார் என்பவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு தனி வார்டு அமைக்கப்பட்டு அங்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பவர்கள் அனுமதிக்கப்பட்டு அவ்ர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வார்டில் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்த, எஸ்தர் ராணி 59, ஜான் 49 மற்றும் ஜெகன் […]
கன்னியாகுமாரி மாவட்டம், பூதப்பாண்டி அருகேயுள்ள மார்த்தால் பகுதியை சேர்ந்தவர், மேரி சுசிலா. 43 வயதாகும் இவர், அந்த பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவரின் மகன் அஜய். 17 வயதாகும் அவர், டிப்ளமோ படித்து வருகிறார். இந்நிலையில், இவர்கள் இருவரும் தடிகாரங்கோணம் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். வாகனத்தை அஜய் ஓட்டிவந்தார். எட்டாமடை பகுதியை நெருங்கியதும் முன்னே சென்றுகொண்டிருந்த டெம்போவை முந்தி செல்ல அஜய் முயன்றார். […]
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப். 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப். 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையானது சிவராத்திரியை முன்னிட்டு அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.அந்த அறிவிப்பில் கன்னியாகுமரியில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் வரும் 21., நடைபெறுவதால் அன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.