ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தரக் கோரி கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவிலில் கடலில் இறங்கி 3000க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டம்
ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் இயல்பு வாழக்கைக்கு திரும்ப பெரும் அவதி பெற்று வருகின்றனர். அதலால் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு மின் கட்டணம் செலுத்த வேண்டிய கால அவகாசம் முதலில் டிசம்பர் 18ஆக இருந்தது, தற்போது இந்த கால அவகாசம் ஜனவரி 31வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஓகி புயலால் கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய 6 MLAகளையும் புயலுக்கு பிறகு காணவில்லை????? 1.கன்னியாகுமரி சடமன்ற உறுப்பினர்-எஸ்.ஆஸ்டின் (திமுக) 2.நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் -என்.சுரேஷ் ராஜன் (திமுக) 3.குளச்சல் சட்டமன்ற உறுப்பினர்-ஜே.ஜி .பிரின்ஸ் (காங்) 4.பத்மநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்-டி.மனோ தங்கராஜன் (திமுக) 5.விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர்-எஸ்.விஜயதரணி(காங்) 6.கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர்-எஸ்.ராஜேஷ் குமார்(காங்) அவர்கள் அனைவரையும் யாராவது பார்த்தல் கன்னியாகுமரி மக்கள் ஓக்கி புயல் […]
ஓகி புயல் காரணமாக கடலுக்குள் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 85மீனவர்களை காணவில்லை அவர்களை மீட்கும் பணிகள் குறித்துஅமைச்சர் ஜெயகுமார் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், ‘கடல்நீரோட்டம் காரணமாக அவர்கள் வேறு பகுதிக்கு சென்றிருக்க வாய்ப்புள்ளது. காணமல் போன மீனவர்களை தேடும் பணியில் 3 கபல்கள், 1 ஹெலிகாப்டர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.’ என கூறினார்.
ஓகி புயலால் கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மக்களுடன் கைகோர்க்கிறது தினச்சுவடு தற்போது கிடைத்த தகவலின் படி சுசிந்திரம் பகுதியில் உள்ள குழந்தகரையில் இருக்கும் பல பள்ளிகளில் வெள்ளம் மற்றும் புயல் மழையால் பாதிக்கபட்டுள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுளனர். பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிக்க தண்ணீர்,உணவு அடிப்படை தேவையாக உள்ளது. மேலும் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள பகுதிகளில் மின்சார இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டு உள்ளதால் ஜெனரட்டார் மிகத்தேவையான […]
குமரி மாவட்டத்தில் ஓகி புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குமரி கடலும் தாமிரபரணி ஆறும் சந்திக்கும் இடத்தில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்தன. தாமிரபரணி ஆற்று வெள்ளமும், கடல் சீற்றமும் இணைந்த்தால் முட்டம் துறைமுகத்தின் கரையில் நிறுத்திவைக்க பட்டிருந்த 30 படகுகள் ஒன்றின் மீது ஒன்று மோதி சேதம் ஏற்பட்டது. இதனால் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் சேதைமடைந்துள்ளன முட்டம் 30 படகுகள் சேதம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கலுன் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், போக்குவரத்து போன்ற அடிப்படை தேவைகள் கூட மிகவும் பாதிக்கபட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு, கல்குளம் தாலுகா பகுதியில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் வாழை பயிரிடப்பட்டது. தற்போது இவை ஓகி புயல் காரணமாக அனைத்தும் சரிந்துள்ளது. சுமார் 50ஆயிரம் வாழைகள் புயலால் சேதமடைந்துள்ளன.
கன்னியாகுமரியை அச்சுறுத்துக் கொண்டிருந்த ஒகி புயல் விலகிச் சென்றது திருவனந்தபுரத்தின் மேற்கு திசையில் 23 கி.மீ தொலைவில் தற்போது ஓகி புயல் மையம் கொண்டுள்ளது – இந்திய வானிலை மையம் #OckhiCyclone #Kanyakumari #PTControlRoom
ஒகி புயலால் கடும் பாதிப்பை கன்னியாகுமரி மாவட்டம் சந்தித்து வருகிறது இதனால் மாவட்ட நிர்வாகம் அவசர எண்களை அறிவித்துள்ளது 1077 ,0465-2231077,9442480028,9445008139
ஓகி புயல் காரணமாக குமரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் சாலை போக்குவரத்தும் பாதிக்கபட்டது. இந்நிலையில் கன்னியாகுமரி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை-கன்னியாகுமரி வழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் புகுந்து வெள்ளம் போல் காட்சியாளிக்கிறது. கன்னியாகுமரியில் கனமழை பெய்து வரும் நிலையில் நெல்லை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் பணகுடி அருகே வெல்ல நீர் சாலைகளில் வெள்ளம் போல் ஓடுகிறது. இதே மாதிரி வெள்ளநீர் அதிகரிக்கும் நிலை தொடர்ந்தால், நெடுஞ்சாலை போக்குவரத்து தடை படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடல் சீற்றம், புயல் தெரியாமல் நேற்று சென்ற மீனவர்கள் இன்று கரை திரும்ப வேண்டும் அனால், கரை திரும்ப முடியாமல் நடுகடலில் தவித்துவருகின்றனர். அவர்களை மீட்க கடற்படை சார்பில் இன்னும் முயற்சி எடுக்கப்படவில்லை என அந்தபகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரியில் ஓகி புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வீடுகளை விட்டு மக்கள் யாரும் வெளியே வர இயலாத சூழல் உருவாகியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கபாடுள்ளது. இதனால் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ரயில் சேவைகளில் பெரிதும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கொல்லம் முதல் சென்னை எழும்பூர் வரை செல்லும் அனத்தபுரி ரயில் திருவனத்தபுரம் வரை இயக்கப்படும் என அறிவிப்பு.
கன்னியகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் காரணமாக சுமார் 70 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது, இதனால் குமாறி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் மண்டைகாடு, புதூர் பகுதி மீனவர்கள் கடலுக்குள் மீன்பிக்க சென்றனர். அப்போது படகு கவிழ்ந்து உயிருக்கு போராடிய நிலையில் முட்டம் பகுதி மீனவர்கள் காப்பாற்றினர்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற்றியுள்ளது .இதனால் கன்னியாகுமரி, நாகர்கோவில்,தூத்துக்குடி மற்றும் நெல்லையில் உள்ள மரங்களை வேறொடு பிடுங்கி எறிகிறது அந்த புயல். கன்னியாகுமரிக்கு தெற்கே 60 கி,மீ தொலைவில் புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஓகி என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் அறிவித்து இருந்தது.இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பலத்த காற்று […]
நாகர்கோவிலில் பார்வதிபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை மத்திய இணை அமைச்சர் திரு.பொன்.ராதாகிருஸ்ணன் அவர்கள் அதன் பணிகளை மேர்பார்வையிட்டார். இதனை நேற்று( 26.11.2017 ) அதன் பணிகளை மேற்பார்வை இட்டு சென்றார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் விவசாய தொழிலாளர் சங்கமும், மாதர் சங்கமும் இணைந்து ரேஷன், நகர்ப்புற வேலை வாய்ப்பு, நல திட்ட அமலாக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க கோரி பெரும் திரள் மனு கொடுக்கும் போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது. இதில் சுமார் 3000 பேர்க்கு மேல் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரியில், தினமும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமான அளவில் வந்துசெல்கின்றனர்.ஆனால் இங்கு, ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்று இருந்தாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்களில்தான் கன்னியாகுமரி சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாகக் காணப்படும். இதை, கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலா சீசன் காலம் என்று சொல்வார்கள். சபரிமலை மண்டல பூஜைக்காக வரும் பக்தர்கள், கன்னியாகுமரிக்கும் வருவார்கள். டிசம்பர் மாதத்தில் பள்ளிக்கூடங்களில் அரையாண்டுத் தேர்வு முடிந்ததும் விடுமுறை […]