கன்னியாகுமரி அருகே 5 கேரள அரசு பேருந்துகள் உட்பட, 20 பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு.
ஓகி புயலால் தமிழகத்தில் இதுவரை 14 பேர் உயிரிழப்பு” மாயமானவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 433 பேர், கேரளாவைச் சேர்ந்தவர்கள் 186 பேர்” “ஓகி புயலால் இதுவரை 619 பேரை காணவில்லை” -மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்..
எதிர்க்கட்சியாக இருந்தாலும் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் காங்கிரஸ் கட்சி தேவையான உதவிகளை செய்யும் – ராகுல் காந்தி காணாமல் போன மீனவர்களை குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குரல் கொடுக்கும்.
நாடு முழுவதும் மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள் – ராகுல் வேதனை * மத்தியிலும், மாநிலத்திலும் நாங்கள் ஆட்சியில் இல்லாவிட்டாலும், உங்கள் பிரச்சனைகளை உரத்த குரலில் எழுப்புவோம் – ராகுல்காந்தி
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட சின்னத்துறை கிராமத்தில் காணாமல் போன மீனவர்கள் குறித்து குடும்பத்தினரிடம் கேட்டறிந்து வருகிறார் ராகுல் காந்தி 400 க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை என மீனவ மக்கள் ராகுலிடம் முறையீடு.
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட கன்னியாகுமரிக்கு வந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
கன்னியாகுமரி: நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சாரல் மழை. தற்போது தான் ஒகி புயல் ஓய்ந்த நிலையில் மீண்டும் மழை தொடங்கியுள்ளது.
கேரள மாநிலம் ஈடுபடக்கூடிய மீட்பு, நிவாரண பணிகளில் 10% பணிகளிலாவது தமிழ்நாடு அரசு ஈடுபடவேண்டும்: மு.க.ஸ்டாலின்
புயல் பாதித்த கன்னியாகுமரியை, பேரிடர் மாவட்டமாக அறிவிக்க கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம், எதிர்க்கட்சி ஸ்டாலின் மனு.
ஜல்லிக்கட்டு பிரச்னையை போல மீனவர்கள் விவகாரத்திலும் சிலர் தவறான கருத்துக்களை பரப்புகின்றனர் – மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
புயல் பாதிப்பால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கான இழப்பீடு குறித்த முதல்வர் பழனிசாமியின் அறிவிப்பை அடுத்து குமரி மாவட்டத்தின் மீனவ கிராமங்களில் நடைபெற்றுவந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்.
கன்னியாகுமரி மாவட்டம் கல்படியில், ஒகி புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு.கல்படி பகுதியில் ஒகி புயலால் பாதித்த பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு; ஆய்வில் அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்பு
வன்முறையை தூண்ட சதி செய்ததாக 7 பேர் கைது கன்னியாகுமரியில் சுப.உதயகுமார் மற்றும் 17 பாதிரியார்கள் மீது வழக்கு
ஒகி புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய கன்னியாகுமரி செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.அவர் விமானம் மூலம் தூத்துக்குடி வந்து பின்னர் சாலை மார்க்கமாக கன்னியாகுமரி செல்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், ‘ஓகி’ புயலில் சிக்கி காணாமல் போன மீனவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘ஓகி’ புயலில் சிக்கிய மீனவர்களை மீட்பதில் அக்கறை காட்டவில்லை எனக் கூறி, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் மீனவர்களின் போராட்டம், நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்த நிலையில், புயலில் சிக்கி மாயமான […]
இன்று காலை 11/12/2017,சற்றுமுன் ஒக்கி புயலின் போது மீன் பிடிக்கச் சென்று புயலில் பாதிப்புள்ளாகி இறந்து போன குளச்சல் பகுதியைச் சேர்ந்த மீனவ சகோதரர்களான ஜஸ்டின் பாபு மற்றும் ஜான் டேவிட்சன் ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது குறைகளை தெரிவித்தனர். அதனை அவர் உரிய கவனம் செலுத்துவதாக அம்மக்களிடம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே இறவிபுத்தன்துறையில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி கண்ணை கட்டி போராட்டம்.