திருவனந்தபுரம்: அன்ஷாத் இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மடத்தரை பகுதியை சேர்ந்தவர். இவரது மனைவி ஷம்னா. நிறைமாத கர்ப்பிணியான இவரை பிரசவத்துக்காக 2 நாட்களுக்கு முன் காலை திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள எஸ்ஏடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் வார்டுக்கு சென்ற அவர் திடீரென மாயமானார். இது தொடர்பாக மருத்துவ கல்லூரி போலீசாரும் தேடி வந்தனர்.பின்னர் அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து ரகளையில் ஈடுபட்டனர்.திடிரென அவரது கணவர் அன்ஷாத்துக்கு நேற்றுமுன் தினம் மாலை ஷம்னாவின் போனில் இருந்து […]
குலசேகரம்:வசந்தகுமாரி இவர் திருவட்டாரை அடுத்துள்ள மாத்தூர் அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர் .17.5 சென்ட் இடம் இவருக்கு சொந்தமாக இரணியல் பகுதியில் உள்ளது. இந்த இடத்தை கடந்த 2013ம் ஆண்டு நாகர்கோவில், வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த சசிகுமார் என்பருக்கு ரூ.54 லட்சம் தொகை பேசி விற்பனை செய்துள்ளாராம்.அப்போது 29 லட்சம் பணத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் ரூ.25 லட்சத்தை கொடுக்காமல் சசிகுமார் தாமதம் செய்துள்ளார். இந்தநிலையில் பாக்கி பணத்தை வசந்தகுமாரி நேற்று முன்தினம் சசிகுமாரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் […]
வருவாய் பேரிடர் ஆணையர் சத்யகோபால் தென் தமிழகத்தில் கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்படும் என தகவல். இதையடுத்து, மீனவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் ஞாயிறு வரை கடல் சீற்றம் வர வாய்ப்புள்ளது. இதனால், சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது முக்கியமான ஒன்றாகும் என்று வருவாய் பேரிடர் ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் யாரும் மேற்கண்ட நாட்களில் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் […]
நாகர்கோவில் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான நாஞ்சில் முருகேசன், தற்போது அக்கட்சியின் எந்த பொறுப்பிலும் இல்லை. ஒழுகினசேரியில் இவருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்குகிறது. அங்குள்ள பாரை முருகேசன் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு டாஸ்மாக் நேரம் முடிந்த பின் விற்பனை நடந்ததாகவும், போலி மதுவகைகள் விற்றதாகவும் போலீசார் வடசேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், போலீஸ் சீருடை அணிந்த சிலர்தான் வாளியில் மதுவகைகளை உள்ளே கொண்டுசென்றதாகவும், இந்தக் காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் […]
மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், போராட்டங்கள் என்ற பெயரில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரன்புதூரில், மத்திய அரசின் கிராம சுயராஜ்ஜிய திட்டத்தின் கீழ், அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுடன் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், இயக்குநர் பாரதிராஜா போன்றோர் மத்திய அரசின் மீது தவறான புரிதல் கொண்டிருப்பது வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அஞ்சுகிராமம்: முத்துகிருஷ்ணன் மகன் மணிகண்டன் இவர் அஞ்சுகிராமம் அருகே குமாரபுரம் தோப்பூரை சேர்ந்தவர். இவர் அதே ஊரை சேர்ந்த 2 நண்பர்களுடன் ஒரே பைக்கில் ராஜாவூர் – குமாரபுரம் தோப்பூர் சாலையில் வந்து கொண்டு இருந்தனர். குமாரபுரம் தோப்பூர் வரும்போது பைக் நிலைதடுமாறி சாலையோர மின்கம்பத்தில் மோதியது.இதில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆட்டோவில் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக மணிகண்டனை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர் […]
மார்த்தாண்டம்:திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து திமுக கொடியேந்தியபடி மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடிக்கு எதிர்பு தெரிவித்து கோஷமிட்டனர். நகர திமுக செயலாளர் பொன்.ஆசைதம்பி தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் பப்புசன் முன்னிலை வகித்தார். இதில் மேல்புறம் ஒன்றிய செயலாளர் சிற்றார் ரவிச்சந்திரன், வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் குமார், விவசாய தொழிலாளர் மாவட்ட அமைப்பாளர் நீலகண்டன், தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர் தினகர், நகர அவைத்தலைவர் மாகின், கவுன்சிலர்கள் அருள்ராஜ், பாலு உள்பட […]
பல்வேறு பகுதிகளில் தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மழை பெய்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி,முதுகுளத்தூர், கீழத்தூவல், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று திடீரென கருமேகங்கள் திரண்டு மழை கொட்டியது. ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக கொட்டிய மழை காரணமாக வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், செல்லம்பட்டி, வெட்டிக்காடு, ஈச்சங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், பட்டுக்கோட்டை சுற்றுப்பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த திடீர் மழையால் பொதுஇடங்களில் நடமாட முடியாமல் போனாலும், குளுமையான […]
நாகர்கோவில்:முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து, நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று காலை கலெக்டர் பிரசாந்த் வடநேரே அரசின் சாதனைகள் குறித்து செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை,துவங்கி வைத்தார். எம்.பி.விஜயகுமார் குத்து விளக்கேற்றினார். இந்த கண்காட்சியில் இலவச ஆடுகள் வழங்கும் திட்டம், கல்வி உதவி தொகைகள், மகப்பேறு நிதி உதவி, திருமண நிதி உதவி போன்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் […]
கருங்கல்:பபிதா ஸ்வீட்டி இவர் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் .இவர் இன்ஜினியரிங் படித்துள்ளார். தற்போது நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சிதறால் பகுதியை சேர்ந்த ஏசி மெக்கானிக் ஆஸ்பின். பபிதா ஸ்வீட்டி வேலை பார்க்கும் நிறுவனத்தில் உள்ள ஏசியை பழுது பார்க்க வந்தபோது, இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது.பபிதா ஸ்வீட்டியின் பெற்றோருக்கு காதல் விவகாரம் தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.பபிதாவிற்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதற்கிடையே கடந்த […]
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் சுசீந்திரம் தபால் நிலையம் முன்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும், அதற்கு உரிய அழுத்தம் கொடுக்காத மாநில அரசை கண்டித்தும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி தலைமை வகித்தார். திமுக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.அவர் கூறியதாவது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க […]
தமிழகத்தில் நேற்று வழக்கறிஞர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, போராட்டம் நடத்தினர். குமரி மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு இந்த போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்து இருந்தார்கள். இதையடுத்து நாகர்கோவிலில் நேற்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் இறங்கினர். நாகர்கோவிலில் நீதிமன்ற வளாகம் முன் வக்கீல் சங்க தலைவர் மகேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வக்கில் சங்க செயலாளர் வக்கீல் மரிய ஸ்டீபன், பொருளாளர் பார்த்தசாரதி மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள், வக்கீல் சங்க நிர்வாகிகள் […]
நாகர்கோவில்: விவசாயிகளின் பல்லாண்டுகால கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கேட்டு நீண்ட நாட்களாக தமிழக அரசோடு இணைந்து நடத்தும் சட்ட போராட்டத்தின் விளைவாக உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலநிர்ணயம் செய்தும் மத்திய அரசு அதனை செய்யாமல் காலம் தாழ்த்துகின்றது.இதனை கண்டித்தும் மாநில அரசின் கண்டிப்பான நடவடிக்கைகளுக்கு பதிலாக காலம் தாழ்த்துகின்ற பணிகளை மேற்கொள்கின்ற தமிழக அரசை கண்டித்தும் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நேற்று […]
கன்னியாகுமரி: ஹைதராபாத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ.கரீம் நாட்டின் அமைதி, மதநல்லிணக்கம், பசுமை இந்தியா, இளைஞர்கள் வாகனப் பாதுகாப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 11.3.2018ல் ஜம்மு காஷ்மீர் லடாக் பகுதியில் இருந்து இரு சக்கர வாகன பயணத்தை தொடங்கினார். டெல்லி, பஞ்சாப், உத்ரகாண்ட், மத்தியப் பிரதேசம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக கடந்து தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். இதற்காக 4,500 கி.மீ தொலைவினை 20 நாள்களில் கடந்து […]
மீன்வளத்துறை அதிகாரிகளைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டத்தில் மீன்களை கடலில் கொட்டி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். குமரி மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகுகள் காலை 5 மணிக்கு மீன்பிடிக்கச் சென்று இரவு 9 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் என மீன்வளத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. அதற்கு மேல் வரும் படகுகளை அதிகாரிகள் துறைமுகத்திற்குள் அனுமதிப்பதில்லை. இதனால் அவர்களால் மீன்களை இறக்கி விற்க முடியாது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 6 விசைப்படகுகள் […]
நாகர்கோவிலை சேர்ந்த பெண் மஷா நசிம் ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான’ தனது பங்களிப்புக்காக கௌரவ தேசிய இளைஞர் விருதைப் பெறுகிறார். அவர் தற்போது மாநில அரசு அதிகாரிகள் பயன் படுத்தும் அளவில் ஹைடெக் ரெயில் கழிப்பறை முறை, எரிபொருள் விநியோகங்கள், எதிர்ப்பு மூழ்கி எச்சரிக்கை போன்று 14 சமூக பயன்பாட்டு கேஜெட்களை கண்டுபிடித்துள்ளார். 2016ஆம் ஆண்டிற்கான மாநில இளைஞர் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் இந்த விருதை இன்று அவர் பிரதமர் நரேந்திர மோடி கையால் வாங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி: கந்துவட்டி கொடுமையால் ஜான் என்ற 75வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை வாங்கிய கடனை திரும்பக் கொடுக்காததால் பிரசன்னகுமார் என்பவர் கொலை மிரட்டல் விடுத்ததாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மார்த்தாண்டம் காவல் ஆய்வாளருக்கு கடிதம்
இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் நியமிக்கபட்டுள்ளார்.இதனால் அவரது சொந்த ஊர் மக்கள் இனிப்பு வழங்கி மகிழ்சியை வெளிபடுத்தினர் . திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குனராக உள்ள சிவன் இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை ஆகும். இஸ்ரோ தலைவராக சிவன் நியமிக்கப்பட்டதற்கு அவரது சொந்த ஊரான நாகர்கோவிலை அடுத்த சரக்கல்விளையைச் சேர்ந்த ஊர் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் சிவன் படித்த சரக்கல்விளை […]
கன்னியாகுமரி மாவட்டம் தான் ஒகி புயலால் அதிகம் பாதிக்கபட்ட மாவட்டம் ஆகும்.எனவே இன்னும் அதன் பாதிப்பில் இருந்து மீளாத காரணத்தால் குமரியில் போராட்டம் நடத்திவருகின்றனர் . கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும், குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. புலியூர்க்குறிச்சி […]
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி தக்கலை அருகே புலியூர்க்குறிச்சியில் 10வது நாளாக விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்பினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.