ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்களை கண்டுபிடித்து தர வேண்டும் எனக்கூறி, உயர்நீதி மதுரை கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது,
அதில், ஓகி புயலில் மாயமானவர்களில் இன்னும் 271 மீனவர்கள் தான் மீட்கப்பட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் 271 மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று 47 மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பியதாக தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
மேலும், வரும் 25ம் தேதிக்கள் அனைத்து மீனவர்களும் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றும் மாயமான மீனவர்கள் அனைவரும் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றதால் அவர்களுக்கு எச்சரிக்கை வழங்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மீட்கப்பட வேண்டிய 271 பேரில் 28 பேர் வெளிமாநில மீனவர்கள் என்றும், மாயமான மீனவர்களின் குடும்பங்களுக்கு நாள்தோறும் ரூ.250 வழங்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தனது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது.
source: dinasuvadu.com
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…
கேரளா : பராசலாவை அடுத்த மூறியன்கரை பகுதியை சேர்ந்த இளைஞர் ஷாரோன் ராஜ் என்பவருக்கு அவரை காதலித்து வந்த கிரிஷ்மா கடந்த…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து அப்பகுதியில் 2வது விமான நிலைய முனையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய…