கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்வளத்துறை அதிகாரிகளைக் கண்டித்து மீனவர்கள் போராட்டம்!
மீன்வளத்துறை அதிகாரிகளைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டத்தில் மீன்களை கடலில் கொட்டி மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
குமரி மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகுகள் காலை 5 மணிக்கு மீன்பிடிக்கச் சென்று இரவு 9 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் என மீன்வளத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. அதற்கு மேல் வரும் படகுகளை அதிகாரிகள் துறைமுகத்திற்குள் அனுமதிப்பதில்லை. இதனால் அவர்களால் மீன்களை இறக்கி விற்க முடியாது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 6 விசைப்படகுகள் உரிய நேரத்தில் வந்தபோதும், படகுகளை துறைமுகத்திற்குள் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை எனவும் இதனால் தங்களால் மீன்களை இறக்கி விற்க முடியாமல் போனதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் தாங்கள் பிடித்து வந்த மீனைக் கடலில் கொட்டி அவர்கள் போராட்டம் நடத்தினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.