‘ஆபாசமான தகவலை பரப்பிய பிஜேபி பிரமுகர் கைது’ போலியான கணக்கு வைத்திருந்தது அம்பலம்..!!

Published by
Dinasuvadu desk

பாஜக பற்றி விமர்சித்து கருத்து தெரிவித்த நபரை போலி முகநூல் கணக்கிலிருந்து இறந்துவிட்டதாக கூறி அவதூறு பரப்பிய பாஜக ஆதரவாளர் சவுதி அரேபியாவில் இருந்து ஊர் திரும்பியதுமே கைது செய்யப்பட்டார்.

Image result for BJPகன்னியாகுமரி மாவட்டம் கூட்டமாவு பகுதியைச் சேர்ந்த கோபி என்பவர் சவுதி அரேபியாவில் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். பாஜக ஆதரவாளரான இவர், பூந்தோப்பு பகுதியை சேர்ந்த டூபஸ் பெலுடின் என்பவர் முகநூல் மூலம் அறிமுகமாகி உள்ளார்.காங்கிரஸ் பிரமுகரான பெலுடின் தொடர்ந்து பாஜக-வையும், பிரதமர் மோடியையும் விமர்சித்து கருத்து வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவரின் முகநூல் பக்கத்தில் ஆபாச புகைப்படத்துடன் பதிவிட்டது மட்டுமின்றி, அவர் இறந்துவிட்டதாகவும் அவதூறாக பரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பெலுடின் கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி, கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் பெலுடின் பதிவு செய்யும் கருத்துக்களை சகித்துக் கொள்ள இயலாததால் கிறிஸ்துராஜ் என்ற பெயரில் போலி கணக்கு ஒன்றை முகநூலில் தொடங்கி அதன்மூலம், பெலுடினின் முகநூல் கணக்கின் டைம்லைனில் அவர் ஆபாச புகைப்படத்துடன் பதிவிட்டது மட்டுமின்றி, அவர் இறந்துவிட்டதாகவும் அவதூறாக பதிவிட்டுள்ளார்.

கிறிஸ்துதாஸ் என்ற பெயரில் கோபி போலி முகநூல் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வந்தது அம்பலமானது. இதையடுத்து, கோபியின் செல்போனில் இருந்து யார் யாருக்கு அழைப்பு செல்கிறது என்பதையும், குறுந்தகவல் அனுப்பபடுகின்றது என்பதையும்போலீசார் கண்காணித்து வந்தனர்.

அதன்மூலம், சவுதியில் இருந்து கோபி சொந்த ஊருக்கு திரும்பும் தகவல் சைபர் கிரைம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன்படி, சவுதி அரேபியாவில் இருந்து ஊர் திரும்பிய சில மணி நேரத்தில் திருவட்டாரில் வைத்து கோபியை கைது செய்தனர். விசாரணையில் வெளி மாநில நண்பர்கள் துணை இருந்ததாகவும் அவர்கள் உதவியுடன் இது போன்று பலரை விமர்சித்துள்ளதாகவும் கோபி தெரிவித்துள்ளார்.

பாஜகவினர் தொடர்ந்து தங்களை விமரிசிப்பவர்கள் மீது இதுபோல தாக்குதல் தொடுப்பது தொடர்கதையாகிறது. மேலும் சபீபத்தில் பாஜகாவின் தேசிய தலைவர் அமித்ஷா சமூகவலைத்தளங்களில் 32 லட்சம் பேரை வைத்துள்ளோம்! உண்மையோ, பொய்யோ, பாஜக நினைத்தால் அதை நாடு முழுவதும் பரபரப்பாக்குவோம்; ! என ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றையும் தெரிவித்தார். அவர் கூறிய 32 லட்சம் பேரில் இதுபோல கணக்கும் ஒன்றாக இருக்கும் என பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

4 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

4 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

4 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

4 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

4 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago