நாகர்கோவில் அருகே மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மணிக்கட்டி பொட்டலைச் சேர்ந்தவர் லிங்கம் (22). தொழிலாளி. லிங்கத்திற்கும் சுசீந்திரம் குளத்தூர் காலனியைச் சேர்ந்த 16 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். மணிக்கட்டிப் பொட்டலில் உள்ள தனது உறவிரை பார்க்க வீட்டுக்கு அப்பெண்ணுக்கு வந்த பொது லிங்கத்துடன் காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலை வளர்த்து வந்தனர்.நாளடைவில் இவர்களின் காதல் குறித்து பெற்றோருக்கும் தெரிந்தது. பின்னர் அவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் லிங்கம், அந்த பெண்ணின் பெற்றோரை நேரில் பார்த்து பெண் கேட்டார். ஆனால் அவர்கள் லிங்கத்துக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டனர்.இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் லிங்கமும், அந்த பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறினர். உவரியில் உள்ள கோவிலுக்கு சென்று அவர்கள் மாலை மாற்றி திருமணம் செய்து தனியாக குடும்பம் நடத்தினர்.பின்னர் அந்த பெண் கர்ப்பமானார
9 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அந்த பெண்ணுக்கு 16 வயதே ஆவதை உறுதி செய்தனர். மைனர் பெண் ஒருவர் கர்ப்பமானது தொடர்பாக அவர்கள் மருத்துவமனையில் இருந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அதன்பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார், 9 மாத கர்ப்பிணியாக இருந்த அந்த பெண்ணை அழைத்து விசாரித்தனர். பின்னர் மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பணியாக்கியதாக லிங்கம் மீது காவல்துறையினர் போஸ்க்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள லிங்கத்தை தேடி வருகிறார்கள்…
DINASUVADU