நாகர்கோவில் அரசு கல்லூரி மருத்துவமனை மருத்துவமனையில் கடந்த ஆண்டு மட்டும் 1019 பேர் அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளத. நாள் ஒன்றுக்கு 2,000 பேர் வரை சிகிச்சை பெற்றுவரும் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் முறையாக வருவது இல்லை.இதனால் நோயாளிகளுக்கு பயிற்சி மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது இதனால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்று குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் சரியான சிகிச்சை அளிக்காததால்உயிரிழந்துள்ளார்.நேற்று பயிற்சி மருத்துவர் தவறான சிகிச்சை அளித்தது அவரது உயிரிழப்புக்கு காரணம் என்று உறவினர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.