மகளின் காதலனை வெட்டிய நாம் தமிழர் கட்சி ஒன்றியச் செயலாளர்..!!
கன்னியாகுமரியை அருகே உள்ள மயிலாடி பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். பெயின்டிங் கான்ட்ராக்டரான இவர், நாம் தமிழர் கட்சியின் அகஸ்தீஸ்வரம் ஒன்றியச் செயலாளராக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டார்லின் (24) என்பவர் ஜெயபாலிடம் வேலைபார்த்து வந்தார். ஸ்டார்லினுக்கும், ஜெயபாலின் மகள் டிக்சோனாவுக்கும் (22) இடையே காதல் ஏற்பட்டது. இதையறிந்த ஜெயபால் இருவரையும் கண்டித்துள்ளார். மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்தார்.
காரில் கடத்தல்
திருமணத்துக்குப் பிறகு, குளச்சலில் உள்ள ஸ்டார்லினின் உறவினர் வீட்டில் தங்கியிருந்த காதல் தம்பதி, கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்க முடிவு செய்து, நேற்று முன்தினம் மாலை காரில் தங்களது உறவினர்களுடன் புறப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயபால், தனது ஆதரவாளர்களுடன் 3 கார்களில் அவர்களை தேடிச் சென்றார்.
கன்னியாகுமரியை அடுத்த கோவளம் பகுதியில் டிக்சோனாவும், ஸ்டார்லினும் வந்த காரை அவர்கள் விரட்டிச் சென்று வழிமறித்தனர். பின்னர், டிக்சோனாவை மட்டும் வலுக்கட்டாயமாக மற்றொரு காரில் ஏற்றிச் சென்றனர். இதைத் தடுக்க முயன்ற ஸ்டார்லின், அவரது உறவினர்கள் சுரேஷ், அருள் ஆகியோர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டனர். படுகாயமடைந்த மூவரும் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.ஜெயபால் உட்பட 8 பேர் மீது கன்னியாகுமரி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் துரைராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். மற்றவர்களைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
DINASUVADU