போராட்டங்கள் என்ற பெயரில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதை ஏற்க முடியாது! மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், போராட்டங்கள் என்ற பெயரில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரன்புதூரில், மத்திய அரசின் கிராம சுயராஜ்ஜிய திட்டத்தின் கீழ், அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுடன் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், இயக்குநர் பாரதிராஜா போன்றோர் மத்திய அரசின் மீது தவறான புரிதல் கொண்டிருப்பது வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.