பஸ் கண்ட்ரைக்டரை வெளுத்து வாங்கிய நபர்..!! பயணிகள் விரட்டி புடித்தனர்..
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே களியக்காவிளை அருகேயுள்ள வன்னியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டான்லி வின்சென்ட் (47). அரசுப் பேருந்து நடத்துநர். களியக்காவிளை- மார்த்தாண்டம் வழித்தடப் பேருந்தில் செவ்வாய்க்கிழமை ஸ்டான்லி வின்சென்ட் பணியில் இருந்தார். அப்போது, கழுவன்திட்டை பகுதியில் பேருந்தில் ஏறிய இளைஞர் மார்த்தாண்டத்துக்கு பயணச்சீட்டு வாங்கியுள்ளார். அவர், அதிக கட்டணம் வசூலிப்பதாக நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டாராம். பேருந்து மார்த்தாண்டம் வடக்குத் தெரு பகுதியில் வந்தபோது அந்த நபர் நடத்துநரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றாராம். அவரை பயணிகள் மடக்கி பிடித்து மார்த்தாண்டம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.