போராட்டத்திற்கு, திருவட்டார் வட்டாரத் தலைவர் எஸ். நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி தொடக்கவுரையாற்றினார்.
போராட்டத்தில், வேலை அட்டை பெற்றுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் உடனடியாக 100 நாள் வேலை வழங்க வேண்டும், அரசு அறிவித்துள்ள தினக்கூலி ரூபாய் 224 வழங்க வேண்டும், நீர்நிலை பராமரிப்பு, குளங்கள் ஆழப்படுத்துதல், வாய்க்கால்கள் தூர்வாருதல், மரம் நடுதல் உள்ளிட்ட பணிகளில் ஜேசிபி இயந்திரங்கள், ஒப்பந்ததாரர்களை புகுத்தாமல், ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும், 110 அரசாணை வழியாக ஊரக நிதியிலிருந்து அரசு ரூ. 1000 கோடி எடுத்துள்ளதை ஊரக நிதிக்கு திருப்பி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், நிர்வாகிகள் வி. நாணுகுட்டன், ஏ. பென் ஜேக்கப், டி. ஸ்ரீகுமார், சி. தங்கமணி, ஜி. ஐசக் அருள்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவட்டாறு காவல் நிலைய ஆய்வாளர் (பொ) செல்வதங்கம், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும், போராட்டம் நடத்தியவர்களிடமும் பேச்சு நடத்தி போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவந்தார்.
இப்போராட்டத்தில் விவசாய சங்கத்தினர் , மற்றும் தொழிலாளர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேறறனர்.