தமிழகம் முழுவதும் அக்டோபர் 4ஆம் தேதி ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்..!!

Default Image

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் முழுவதும் போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது…

 
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில அளவிலான பயிற்சி முகாம்  பெரியார்நகரில் 2 நாட்கள் நடந்து வருகின்றது. பயிற்சி முகாமுக்கு மாநில தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் மனோகரன் வரவேற்று பேசினார். குமரி மாவட்ட தலைவர் இளங்கோ அறிமுக உரையாற்றினார்.
மூட்டா அமைப்பின் பொதுச்செயலாளர் நாகராஜன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, மாவட்ட செயலாளர் வினித், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு மாநில இணை அமைப்பாளர் செண்பகம், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு துணைத்தலைவர் சுவாமிநாதன், மூட்டா அமைப்பின் முன்னாள் தலைவர் பேராசிரியர் பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி  பேசினர்கள்.

இம்முகாமில் அரசின் தவறான கொள்கைகளால் ஆசிரியரின் உரிமைகள் பறிக்கப்படுவதையும் , மறுக்கப்படுவதையும் பற்றி பேசி விவாதித்தனர். பயிற்சி முகாமின் கடைசி நாளை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், 5 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ அமைப்பு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது குறித்தும் , இந்த 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் ஆசிரியர்கள் அக்டோபர் மாதம் 4–ந் தேதி ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்து வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என்றும், போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது…

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்