குமரி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கேரளாவுக்கு நிவாரணப் பொருட்கள்…
கன்னியாகுமரி தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில், ரூ. 2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் கேரளத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.கேரள வெள்ளப் பாதிப்புக்கு பல்வேறு தரப்பில் மக்கள் ,நடிகர்கள் உதவி செய்துள்ளனர்.குறிப்பாக நடிகர் விஜய் ஏற்கனவே தன்னுடைய மன்றம் சார்பில் உதவிகளை அறிவித்தார்.இந்த நிலையில் நேற்று கேரளத்தில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், குமரி மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அரிசி, தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் குடம், துணி வகைகள், குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள், மருந்து வகைகள் உள்ளிட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் செவ்வாய்க்கிழமை மார்த்தாண்டத்திலிருந்து கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதிக்கு லாரியில் அனுப்பிவைக்கப்பட்டது.இதில் குமரி மேற்கு மாவட்ட தலைவர் சபின், செயலர் சுரேஷ், துணைத் தலைவர் எட்வின் அருள், மற்றும் பலர் பங்கேற்றனர்..
DINASUVADU