குமரியில் அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீச்சு…!!
ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து ஊழியர்கள் 8வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் சி.ஐ.டி.யூ , தொ.மு.ச உட்பட 23 தொழிற்சங்கங்கள் ஒவ்வொரு கட்டமான போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமியார்மடம் பகுதியில் தமிழக அரசு பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.