கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் ரயில்கள் ரத்து
கன்னியாகுமரியில் ஓகி புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வீடுகளை விட்டு மக்கள் யாரும் வெளியே வர இயலாத சூழல் உருவாகியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கபாடுள்ளது.
இதனால் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ரயில் சேவைகளில் பெரிதும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கொல்லம் முதல் சென்னை எழும்பூர் வரை செல்லும் அனத்தபுரி ரயில் திருவனத்தபுரம் வரை இயக்கப்படும் என அறிவிப்பு.