ஓகி புயல்: குமரியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஜெனரேட்டர் தேவை…உதவ விரும்புவோர் தொடர்பு கொள்க…!
ஓகி புயலால் கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மக்களுடன் கைகோர்க்கிறது தினச்சுவடு தற்போது கிடைத்த தகவலின் படி சுசிந்திரம் பகுதியில் உள்ள குழந்தகரையில் இருக்கும் பல பள்ளிகளில் வெள்ளம் மற்றும் புயல் மழையால் பாதிக்கபட்டுள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுளனர்.
பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிக்க தண்ணீர்,உணவு அடிப்படை தேவையாக உள்ளது. மேலும் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள பகுதிகளில் மின்சார இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டு உள்ளதால் ஜெனரட்டார் மிகத்தேவையான ஒன்றாக மாறியுள்ளது.உதவிகள் செய்ய விரும்புவோர் தொடர்புகொள்ள கொள்ளவேண்டிய நபர்–> டைசன் 9789433783