ஓகி புயலுக்கு 2 வர் பலி
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற்றியுள்ளது .இதனால் கன்னியாகுமரி, நாகர்கோவில்,தூத்துக்குடி மற்றும் நெல்லையில் உள்ள மரங்களை வேறொடு பிடுங்கி எறிகிறது அந்த புயல்.
கன்னியாகுமரிக்கு தெற்கே 60 கி,மீ தொலைவில் புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஓகி என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் அறிவித்து இருந்தது.இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன. அதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜாகமங்கலம்துறையில் மரம் விழுந்த விபத்தில் ராஜேந்திரன் என்பவர் உயிரிழந்ததாகவும், குழித்துறை அருகே பரக்குந்தில் வீட்டின் மேல் மரம் விழுந்ததில் அலெக்சாண்டர் என்ற முதியவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.