நாகர்கோவில்,
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு தமிழ்நாடு உயர்கல்வி மன்ற அறிவிப்புக்கு மாறாக மாணவர்களின் தேர்வு கட்டணத்தை உயர்த்தியது. இதைக் கண்டித்தும், பல்வேறு வகைகளில் மாணவர்கள் மீது கல்வி கட்டண சுமையை ஏற்றுவதை கண்டித்தும், தமிழில் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் கல்லூரி மாணவ-மாணவிகள் அடிக்கடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்றும் குமரி மாவட்டத்தில் சில கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து அந்தந்த கல்லூரிகளின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.
இந்திய மாணவர் சங்கத்தின் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி கிளை சார்பில் மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரியின் பிரதான நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜெஸின் தலைமை தாங்கினார். ஸ்ரீஜீ, சச்சின், பிரிஸ்கில், ஸ்ரீராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களில் சிலர் கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை கைகளில் பிடித்திருந்தனர்.
இதேபோல் நாகர்கோவில் இந்து கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போராட்டம் நடத்திய மாணவ-மாணவிகள் அந்தந்த கல்லூரிகளில் இருந்து பேரணியாக புறப்பட்டு நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள தபால் நிலையத்துக்கு வந்தனர்.
அங்கு தபால் நிலைய வாசலில் அமர்ந்து தபால் அட்டைகளில் தங்களது கோரிக்கைகளை தனித்தனியாக எழுதி தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பினர்.ஒரே நேரத்தில் மாணவ- மாணவிகள் குவிந்ததால் தபால் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
DINASUVADU
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…