அதிமுக வின் கொண்டாட்டம் மீண்டும் தொடக்கம்..!!
கன்னியாகுமரி
அதிமுக வை உருவாக்கிய MGR ரின் நுற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் என அதிமுக முடிவு செய்து இருந்தது.அதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடபட்டு வந்த சுழலில் தற்போது குமரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இன்று நடைபெற்ற கால்கோல் விழாவில் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் வரும் 22 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் விழாவிற்கான கால்கோல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, ராஜலட்சுமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டு முதற்கட்ட பணிகளை தொடங்கி வைத்தனர்.மேலும், நிகழ்ச்சியில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், அனைத்து துறை உயர் அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
DINASUVADU