காஞ்சிபுரம்

காஞ்சி கிறிஸ்துவ தொண்டு நிறுவனத்தில் கண்டெடுக்கப்பட்ட பிணக்குவியலுக்கு வைகோ கண்டனம்!

காஞ்சிபுரம் மாவட்டம் – உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கம் அடுத்த பாலேஸ்வரம் கிராமத்தில் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த தாமஸ் என்கின்ற தனியாருக்குச் சொந்தமான தொண்டு நிறுவனம், ஏழு ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. ஆதரவு அற்றோர், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் என முந்நூறுக்கும் மேற்பட்டோரைத் தங்க வைத்து இருக்கின்றனர். அவர்களைக் கடுமையான சித்திரவதைக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாக்குகின்றனர். ஒருமுறை உள்ளே சென்று விட்டால் பின்பு வெளி உலகத்தைக் காணவே முடியாது என்ற நிலைமை இருக்கின்றது. சேவை மனப்பான்மையுடன் […]

#Politics 12 Min Read
Default Image

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்ற கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தீ விபத்து

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு அருகே நடந்த ஒரு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொண்டார். விழா நடந்துக்கொண்டிருக்கும் போது திடிரென்று தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. ஆளுநர் அமர்ந்திருந்த மேடை எதிரில் பெரும் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து கல்லூரியில் இருந்து ஆளுநர் பன்வாரிலால் பத்திரமாக புறப்பட்டுள்ளார்.

college graduate ceremony 1 Min Read
Default Image

காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு 4வது நாளாக இன்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!

காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு 4வது நாளாக இன்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு.. சங்கரமடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர்,தமிழக ஆளுநர் மற்றும் பிஜேபி தேசிய செயலாளர் ஹேச்.ராஜா ஆகியோர் பங்கேற்ற சமஸ்கிருதம் இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சியின் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது எழுந்து நிற்காமல் அமர்ந்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. போராட்டம் நடத்தப்போவதாக சில அமைப்புகள் தெரிவித்ததையடுத்து தமிழக காவல்துறையானது தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகிறது.

kanchiepuram 2 Min Read
Default Image

காஞ்சி சங்கர மடத்திற்கு 3வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை தொடர்பாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதால் காஞ்சி சங்கர மடத்திற்கு 3வது நாளாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காமல் அவமதித்த விஜயேந்திரரின் உருவபொம்மையை தஞ்சையில் மாணவர்கள் எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய நூல் வெளியிட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி […]

#Police 4 Min Read
Default Image

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் டி.எஸ்.பி.தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென குவிப்பு!

13வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 6வது நாளாக தொடர் போரட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 பணிமனைகளை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டுள்ளன.இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் குடும்பத்தோடு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தபோவதாக வந்த தகவலையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் டி.எஸ்.பி.முகிலன் தலைமையில் 8 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பேருந்து நிலையத்தில் போராட்டம் நடத்த […]

india 3 Min Read
Default Image

காஞ்சிபுரம்  அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து! ஒருவர் பலி …..

காஞ்சிபுரம்  அருகே இரு சக்கர வாகனம் மீது தனியார் நிறுவன பேருந்து மோதியதில் பாஜக உறுப்பினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டம்  அருகே    கீழ்அம்பி – சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  கீழ்அம்பி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பாரதிய ஜனதா கட்சியின் காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளரும் மாற்று திறனாளியுமான ஸ்ரீதர் மீது தனியார் நிறுவன பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலுசெட்டிசத்திரம் காவல் ஆய்வாளர் பிரபாகர் விபத்து தொடர்பாக  விசாரணை நடத்தி […]

#BJP 2 Min Read
Default Image

காஞ்சிபுரம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த கார் மீது, அரசு பேருந்து மோதிய விபத்து! 5 பேர் பலி …..

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த கார் மீது, அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகினர். சென்னையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற கார் ஒன்று, மதுராந்தகத்தை அடுத்த தொழுப்பேடு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டு இருந்தது. அப்போது, சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற அரசு பேருந்து கார் மீது பின்புறமாக மோதியது. மோதிய வேகத்தில், அருகில் இருந்த ஏரியில் […]

#Chennai 2 Min Read
Default Image

 காஞ்சிபுரத்தில் தலித் கிறிஸ்த்தவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்…!

திருக்கழுகுன்றம் அருகிலுள்ள சோகன்டி கிராமத்தில் 40 வருடமாக தலித் கிறித்தவர்கள் வழிபாடு நடத்திவந்த கெபிக்கு வரக்கூடாது என முன்னால் சாதி இந்துக்களும் இந்நாள் மதவெறி சாதி இந்துக்களும் தடை செய்திருக்கின்றனர். இதானால் தலித் கிறித்தவர்கள் பலர் தாக்கப்பட்டுள்ளனர்.மேலும் இந்நிகழ்வில் அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தலித் கிறித்தவர்களின் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பின்னர் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் செயலாளர் சாமுவேல் […]

dalit 2 Min Read
Default Image

காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி மாட்டுவண்டியில் மணல் அள்ளிய 7 பேர் கைது…!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யூரை அடுத்த தண்டரையில் உள்ள ஆற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளியதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும் அவர்களது 7 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்துள்ளது அனைக்கட்டு காவல்துறை. source: https://www.dinasuvadu.com

bullack cart 1 Min Read
Default Image
Default Image

ஆம்புலன்ஸ் தராததால் மாணவி உயிரிழப்பு என புகார்!

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவியை உயர் சிகிச்சைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் விசாரணை. ஆம்புலன்ஸ் தராததால் மாணவி உயிரிழப்பு என புகார். மாணவி உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – மருத்துவத்துறை இயக்குநர் இன்பசேகரன் கூறியுள்ளார். மருத்துவர், மருத்துவமனை கண்காணிப்பாளர், ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது – இன்பசேகரன்

india 2 Min Read
Default Image
Default Image

காஞ்சிபுரம் : செய்யாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழகத்தில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்து அணைகளும் நிரம்பிவிட்டன. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செய்யாற்றில் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாகரல், கீழ்புதூர், வள்ளிமேடு, தம்மரஜபுரம், அங்கம்பாக்கம் ஆகிய ஊர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து, செய்யாற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

kanjipuram 2 Min Read
Default Image