காஞ்சிபுரம் நகர கேபிள் டிவி ஆபரேட்டர் சங்கம் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 500 கிலோ அரிசியை வழங்கினர் இதனை கேரள மக்களுக்கு அனுப்பி உதவிடக்கோரி மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் நிவாரண பொருட்களை அளித்தனர். DINASUVADU
மாவட்ட ஆட்சியர் பொன்னையா காஞ்சிபுரத்தில் இருந்து கேரளாவுக்கு ரூ.23 லட்சம் மதிப்பிலான 40 டன் நிவாரணப் பொருட்களை 4 லாரிகள் மூலம் அனுப்பி வைத்தார். தமிழகத்தில் உள்ள பல்வேறு தரப்பினரும் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பிற்கு உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா காஞ்சிபுரத்தில் இருந்து கேரளாவுக்கு ரூ.23 லட்சம் மதிப்பிலான 40 டன் நிவாரணப் பொருட்களை 4 லாரிகள் மூலம் அனுப்பி வைத்தார்.மேலும் கேரளாவுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு 044-27233540இல் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். DINASUVADU
காஞ்சிபுரத்தில் அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு வகுப்புகளை புறகணித்து போரட்டத்தில் ஈடுபட்டனர். DINASUVADU
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்மருவத்தூர் சித்தர்பீட ஆடித்திருவிழாவையொட்டி நாளை உள்ளூர் விடுமுறை என்று காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் செப்.8ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளார். DINASUVADU
நிலத்தை அளக்க அசோக் ராஜ் என்பவரிடம் காஞ்சிபுரம் பெருநகராட்சி நிலஅளவை பிரிவில் ரூ.2,000 லஞ்சம் வாங்கிய நகராட்சி சர்வேயர் சங்கரை லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்தனர்.பின்னர் காஞ்சிபுரம் பெருநகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர நிலஅளவை பிரிவு அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாணியஞ்சாவடியில், ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் இளநிலை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கிவைத்தார்.அதன் பின் செய்த்யாளர்களை சந்தித்த ஜெயக்குமார்நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கொண்டு வரும் தீர்மானத்திற்கு பற்றி கேள்வி எழுப்பிய பொழுது அது கட்சி முடிவெடுக்கும் என்று தெரிவித்தார் .ஐடி ரைட் என்பது ஒரு தன்னிச்சையான நிர்வாகம் நடத்தும் சோதனை ஆகையால் இது எந்த வித நிர்பந்திக்க நடக்கும் முயற்சி அல்ல அம்மா அரசாங்கம் அவரின் ஆசைபடியே நடைபெறுகிறது வரிஏய்ப்பு செய்வோர் சட்டதிர்க்கு கட்டுப்பட்டுதான் […]
காஞ்சிபுரம் அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் பெருநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். காஞ்சிபுரம் பெருநகராட்சி 19 வார்டுக்குட்ப்பட்ட மாண்டுகணிஸ்வரர் மற்றும் ஒ.பி.குளம் தெருவில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் முறையாக குடிநீர் வழங்காத பெருநகராட்சியை கண்டித்து அப்பகுதி பெண்கள் காலி குடங்ளுடன் காஞ்சிபுரம் பெருநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களா ஓன்று உள்ளது . அப்போது அவர் முதல்வராக இருந்தபோது சிறுதாவூரில் உள்ள பங்களாவிற்கு அடிக்கடி சென்று ஒய்வு எடுப்பார்.எனவே ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சிறுதாவூரில் உள்ள பங்களா மூடியே இருந்தது. இந்நிலையில் நேற்று சிறுதாவூரில் உள்ள பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தகவலை அறிந்து அருகில் இருந்து வந்த தீயணைப்பு படையினர் 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் இந்த தீயை கட்டுப்படுத்தினர்.பல ஏக்கர் நிலங்கள் தீக்கு இரையாகியுள்ளதாக தகவல் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தையும் விவசாயத்தையும் பாதுகாக்கும் வகையில் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்கும் பணியை பொதுப்பணித் துறை தீவிரப்படுத்தியுள்ளது. செய்யாற்றில் வெங்கச்சேரி பகுதியில் ஏற்கெனவே ரூ.8 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டு வரும் நிலையில் பாலாற்றில் 2 இடங்களில் ரூ.78 கோடியில் தடுப்பணைகள் கட்டுவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய 3 ஆறுகள் ஓடுகின்றன. வேகவதி ஆறு கழிவுநீர் செல்லும் கால்வாயாக மாறிவிட்ட நிலை யில் பாலாறும், செய்யாறும் […]
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள , கார் இருக்கைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. சாத்தமை கிராமத்தில் இயங்கும் பார்க் ஆலையில் இருந்து, வெளிநாடுகளுக்கு கார் இருக்கைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆலையில், கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. பின்னர், ஒரு மணிநேரமாக போராடி, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
தமிழக வாழ்வுரிமை கட்சியினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து காஞ்சிபுரத்தில் உள்ள மத்தியசரக்கு மற்றும் சேவை வரிதுறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது இரத்தம் போல்சாயம் கலந்த தண்ணீர் பானைகளை உடைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான கலந்து கொண்டனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சென்னை, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் 10 பெண்கள் படுகாயம் அடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரின் அருகே உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் இருந்து வேலை முடிந்து பெண்கள் ஒரு வேனில் காஞ்சிபுரம் நோக்கி வந்துள்ளனர். அப்போது, பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் லாரி சாலையை கடக்க முயன்ற வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், வேன் தலைகீழாக கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. […]
விஷ்வ இந்து பரிஷத் ரத யாத்திரை விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து சட்டசபையில் வெளிநடப்பு செய்து சாலை மறியல் செய்த ஸ்டாலினை போலீஸார் கைது செய்ததை கண்டித்து காஞ்சிபுரத்தில் திமுகவினர் சலைமறியல் சாலை மறியலில் ஈடுபட்ட மேற்பட்ட200 திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் தொழிலாளர் நீதிமன்றத்தை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி திறந்து வைத்தார். இந்த நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் , திருவள்ளுர், திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலேஷ்வரம் அருகே உள்ள புனித அருளானந்தர் கருணை இல்லத்தில் மர்ம மரணங்கள் தொடர்பான புகாரை சிபிஐ விசாரணைக்கோரிய வழக்கு. தமிழக உள்துறை செயலர் 3 வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி மலை காட்டுத்தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த புனிதா குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை காஞ்சிபுரம் ஆட்சியர் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூரில் ராணி என்பவர் வீட்டில் சுமார் 30 சவரன் தங்கநகைகள் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப்பொருட்கள் மர்ம நபர்கள் சிலரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
2018 ஆம் ஆண்டுக்கான காஞ்சிபுரம் மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு: 18 முதல்-65 வயது வரை . மேலும் விவரங்களை அறிய : https://goo.gl/oUBqgE விண்ணப்பத்திற்கான கடைசி நாள்: 02.03.2018 பதவியின் பெயர்:மருத்துவ அலுவலர், சுகாதார வருகையாளர், லேப் டெக்னீசியன் மற்றும் பல வேலைகள்