அத்திவரதர் காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை பக்தர்களின் தரிசனத்திற்காக கடந்த 1-ம் தேதி முதல் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டு சயன கோலத்தில் 31 நாள்கள் காட்சியளித்தார். இன்று முதல் 17 நாள்கள் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். அத்திவரதர் நின்ற கோலத்தில் இன்று காட்சியளித்ததால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. இந்நிலையில் அத்திவரதர் சயன கோலத்தில் காட்சியளித்த போது […]
அத்திவரதரை பார்க்க இதுவரை 41 லட்சத்திற்கு மேற்பட்டோர் பார்த்து தரிசித்துள்ளனர் .இந்நிலையில் இன்று காலை சற்று கூட்டம் குறைவாகவே இருந்தது அதன் பின்பு கூட்டம் அதிகரித்துள்ளது . இந்நிலையில் அத்திவரதரை பார்க்க விஐபி களுக்கு தனியாக வர விஐபி வரிசை உள்ளது இதில் அதற்க்கான அனுமதி பெற்றவர்கள் மட்டுமே வரமுடியும் .ஆனால் சற்றுமுன் பட்டாக்கத்தியுடன் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் .நேற்று காஞ்சிபுரத்தில் பெட்ரோல் பங்கில் கத்தியைக்காட்டி சிலர் ஊழியர்களின் பணப்பையை பறித்து சென்றுள்ளனர் .இந்நிலையில் […]
வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் வைக்கப்படும் அத்திவரதர் சிலை வெளியில் எடுத்து 48 நாள்கள் பூஜை நடத்துவார்கள். 48 நாள்கள் பக்தர்களுக்கு காட்சியளித்த பின்னர் மீண்டும் தெப்பக்குளத்தின் அடியில் அத்திவரதர் சிலையை வைத்து விடுவார்கள். இந்நிலையில் அத்திவரதர் வைபவம் தொடர்பாக துணை இராணுவ பாதுகாப்பு , மூலவர் தரிசனதத்திற்கு அனுமதி , குளிர் சாதன வசதி போன்ற 6 வழக்குகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்குகளை சென்னை உயர்நீதி […]
வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் வைக்கப்படும் அத்திவரதர் சிலை வெளியில் எடுத்து 48 நாள்கள் பூஜை நடத்துவார்கள்.பின்னர் மீண்டும் தெப்பக்குளத்தின் அடியில் அத்திவரதர் சிலையை வைத்து விடுவார்கள். இந்நிலையில் கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த உற்சவத்தின் 29-ம் நாள் இன்று அத்திவரதர் ஆரஞ்சு நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளித்து கொண்டு இருக்கிறார். நேற்று விடுமுறை என்பதால் அத்திவரதரை தரிசனம் செய்ய பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அத்திவரதர் […]
அத்திவரதர் வைபவத்தின் 29-ம் நாளான இன்று கூட்டம் சற்று குறைவாக தான் உள்ளது. அத்திவரதர் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் சுவாமி நின்ற திருகோலத்தில் காட்சியளிக்க உள்ளார். அதனால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாநில நிர்வாகம் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை அதிகரிக்க முடிவு செய்து உள்ளனர்.மேலும் பல இடங்களில் குடிநீர் , கழிப்பறை வசதிகள் அதிகரிக்கவும் முடிவு செய்து உள்ளனர். இந்நிலையில் கடந்த 28 நாள்களில் அத்திவரதரை 41 லட்சம் […]
காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க தினம் தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. 1 மணி வரை சுமார் 1.30 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துவிட்டு சென்றுள்ளனர். தற்போது வரை 33 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்வது கூட அந்த கூட்டத்தில் தாமதமாக இருக்கிறது. இந்த பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த, மாவட்ட […]
காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதால் சுமார் 2 லட்சம் பகதர்கள் தரிசிக்க வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது கூட்ட நெரிசல் காரணமாக 15 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்துள்ளனர். மயக்கமடைந்த 15 பேரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் அத்திவரதரை காண நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து விட்டு செல்கின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், மாவட்ட நிர்வாகம், பக்தர்களை கிழக்கு வாசல் வழியாக உள்ளே அனுப்பி, மேற்கு வாசல் வழியாக வெளியே அனுப்பும்படி பாதை வடிவமைத்து உள்ளனர். பக்தர்கள் கிழக்கு வாசல் வழியாக உள்ளே செல்கையில் காலணிகளை அங்கேயே கழட்டி விட்டு சென்று விடுகின்றனர். கிழக்கு வாசலுக்கும் மேற்கு வாசலுக்கும் இடையே சுமார் ஒன்றரை கிமீ இருப்பதாலும், வெகு நேரம் காத்திருந்து தரிசனம் […]
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் காட்சி அளிப்பதால் அவரை காண தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். 25 -வது நாளான இன்று அத்திவரதரை காண காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். இந்நிலையில் அத்திவரதரை காண வரிசையில் காத்துக்கொண்டு இருந்த சிறுவன் உட்பட 4 பேர் மயங்கி விழுந்தார்கள்.அவர்களுக்கு கோவில் வளாகத்தில் உள்ள மருத்துவ முகாமில் சிகிக்சை கொடுக்கப்பட்டது. பிறகு நான்கு பேரும் தரிசனம் செய்ய அனுப்பி வைத்தனர்.இன்று மட்டும் 180 பேர் சிகிக்சை […]
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உற்சவத்தின் 22-வது நாளான இன்று அத்திவரதர் தரிசனம் செய்ய பக்கதர்கள் கூட்டம் குவிந்து உள்ளது. இந்நிலையில் ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஜீயர் ஒருவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் , காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதரை மீண்டும் பூமிக்கு அடியில் வைக்க கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் மடத்தை சேர்ந்த சடகோப ராமானுஜ ஜீயர் கூறினார். கடந்த காலத்தில் தான் திருட்டு பயம் கருதி அத்திவரதரை பூமிக்கு அடியில் வைத்தனர். ஆனால் தற்போது அதற்கு […]
அத்திவரதர் திருவிழா இன்றுடன் தொங்கி 18 நாள்கள் ஆகி உள்ளது.இந்நிலையில் இன்று அத்திவரதரை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவித்தனர்.அத்திவரதரை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததால் இன்று பக்தர்கள் இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் குழந்தைகள் ,பெரியவர்கள் என 200 மேற்பட்ட பக்தர்கள் மயங்கி விழுந்தனர்.இதை தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள மருத்துவ முகாமில் மயங்கி விழுந்த பக்தர்களுக்கு சிகிக்சையளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல இன்று அத்திவரதரை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததால் காஞ்சிபுரம் – வாலாஜா […]
இன்று சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி , தமிழக சட்டப்பேரவை விதி 110-கீழ் செங்கல்பட்டு , தென்காசி புதிய மாவட்டங்களாக அறிவித்தார். நெல்லையில் இருந்து தென்காசியையும் , காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டையும் பிரித்து புதிய இரண்டு மாவட்டங்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். தமிழகத்தில் ஏற்கனவே புதியதாக கள்ளக்குறிச்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது செங்கல்பட்டு ,தென்காசி இரண்டு புதிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டதால் தற்போது தமிழகத்தில் 35 மாவட்டங்களாக மாறி உள்ளது.மேலும் புதிய இரண்டு […]
அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை ,48 நாள்கள் பக்தர்களுக்கு காட்சி தருவார்.இதனை தொடர்ந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தை நோக்கி படையெடுத்து வந்து அத்திவரதர் தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 12 நாள்களில் 15 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து உள்ளனர். இந்நிலையில் நேற்று குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு பக்தர்கள் சில மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டனர்.இருப்பினும் 1லட்சத்து 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று கோவில் வளாகத்தில் அத்திவரதரை தரிசிக்க வந்த […]
காஞ்சிபுரம் மாவட்டமே தற்போது விழாகோலம் பூண்டுள்ளது.காரணம் 40 ஆண்டுளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு அருள் ஆசியை வழங்க வருபவர் அத்திவரதர் இந்நிலையில் இவரை காண மக்கள் வெளியூரில் இருந்து எல்லாம் வந்த வண்ணம் உள்ளனர். அங்கு தினமும் அலைஅலையாக திரண்டு வழிபட்டு வருகின்றனர்.மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் தரிசனம் செய்ய அதிகமாவதாலும் ,வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது இதனை கருத்தில் கொண்டு அவர்களின் வசதிக்காக தென்னக ரயில்வே தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் […]
காஞ்சிபுரத்தில் திருமங்கை ஆழ்வார் கோவிலில் ப்ரமோச்சுவாத்தை முன்னிட்டு ஆழ்வார் பாடல் பரசுராம் பாடுவடுவதில் வடகலை தென்கலை பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தாங்கள் பாட வேண்டிய பாடலை மற்றொரு பிரிவினர் பாடியதாக கூறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் திமுக வாக்கு என்னிக்கையில் முன்னிலையில் உள்ளது. அதிமுக 2000 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் அனைத்து இடங்களிலுல் வாக்குப்பதிவுகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், கே.கே.புதூர் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தங்களுடைய கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாததால், தாங்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், கே.கே.புதூர் கிராமத்தில் 934 வாக்காளர்களும், இருசம்மநல்லூரில் 700 வாக்காளர்களும் இருந்த நிலையில், ஒருவர் கூட வாக்களிக்காமல், அப்பகுதி வாக்குச்சாவடிகள் வெறிசோடி காணப்படுகிறது. அப்பகுதியில் வாழும் மக்கள் தாங்கள் வசிக்கும் கே.கே.புதூர் கிராமத்தில் உள்ள மருத்துவ […]
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே, தனியார் கல்லூரியில் பொறியியல் 4ஆம் ஆண்டு படித்து வந்த கேரளாவை சேர்ந்த சையத், அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தார். இந்நிலையில், தனது அறையை தானியங்கி பூட்டு மூலம் பூட்டிக் கொண்டு வெளியே வந்த போது, சாவியை உள்ளே வைத்து விட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மொட்டை மாடியில் இருந்து கயிற்றின் மூலம் பால்கனி வழியே இறங்கி, அறைக்குள் சென்று சாவியை எடுக்க முடிவு செய்தார். இந்நிலையில், சையத், மாடியில் இருந்து கயிறு […]
தேர்தல் பிரச்சார மேடையை பிரித்த போது தொழிலாளியின் உயிரை காவு வாங்கிய மின்சாரம். காஞ்சிபுரம், மதுராந்தகத்தில் தேர்தல் பிரச்சார மேடையை பிரித்துக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். மேலும், ஒருவர் மிசாரம் தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்மழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தது. அதன்படி சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர்மழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.