சீனாவை தொடர்ந்து, கொரோனா வைரஸானது இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இதன் தீவிரம் அதிகரிக்காமல் இருக்க இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் மிக கடுமையாக உழைத்து வருகின்றனர். இதனையடுத்து, காஞ்சிப்புரம் மாவட்டம், நீலாங்கரையில், தங்கள் உயிரை பொருட்படுத்தாது, பிறர் உயிர்காக்க போராடும் தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. உணவு வாங்கியவர்களுக்கு தூய்மை […]
முதலில் சீனாவில் கோரத்தாண்டவம் ஆடி பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய கொரோனா, தற்போது மற்ற நாடுகளிலும் மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த நோயால் 400-க்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்திலும், சென்னை, காஞ்சிபுரம், கோவை ஈரோடு, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரத்தில், 71 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளதாக, இவர்கள் தற்போது தொடர் கண்காணிப்பில் உள்ளனர். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 71 பேரும் வீடுகளில் […]
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக தமிழகத்தில் 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.. தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் நேற்று மக்கள் சுயஊரடங்கை கடைப்பிடித்தனர்.இதன் விளைவாக நேற்று இந்தியாவே ஒரு நாள் ஸ்தம்பித்து போனது என்று கூட கூறலாம்.ஆனால் பொதுமக்கள் இந்த சுய ஊரடங்கை மிக பொறுப்புடன் செய்து வெற்றியடைய செய்துள்ளனர்.இதற்கு எல்லாம் மூலக்காரணமாக இந்தியா முழுவது தற்போது வேகம் எடுத்துள்ள கொரோனா வைரஸை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல […]
தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆயகொளத்தூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த 3 ஆண்டுகளில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.127 கோடி நிதி கிடைத்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து காஞ்சிபுரத்தில் ரூ.18 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு […]
பெற்ற குழந்தையை கழிவுநீர் கால்வாயில் வீசி கொன்ற கொடூர தாய்.கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட விபரீதம். பின்னர் கொலை வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்த காவல்துறையினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத்தை சேர்ந்தவர் விநாயகம் ஆவார்.இவரது மனைவி மீனாட்சி ஆவார்.இருவரும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தும் இரண்டு குழந்தைகளும் இறந்துள்ளது.பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் விநாயகத்தை பிரிந்து மீனாட்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்துள்ளார். […]
வீட்டிற்குள் தனியாக இருந்த இளம்பெண்.மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த தோழி அவரை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன. ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் 21 வயது இளம் பெண் ஆவார்.இவர் கடந்த ஓராண்டாக காஞ்சிபுரத்தை அடுத்த ஆதனஞ்சேரி பெரியார் தெருவில் தோழியுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ஒரகடம் ராயல் என்பீல்டு கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு நேற்று இரவு நேர வேலை என்பதால் தோழி […]
கோவூரில் சரமாரியாக வெட்டப்பட்டு ரெத்த வெள்ளத்தில் கிடந்த உடல்.அதிர்ச்சியடைந்த மக்கள். மனைவி உறவினர்களுடன் தகரா ?என்ற பாணியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி வட்டத்தில் அமைந்துள்ள பகுதி மாங்காடை அடுத்த கோவூரில் அணு கார்டன் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் ஆவார்.இவர் அதே பகுதியில் பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார். மேலும் சரியாக பைனான்ஸ் காட்டாத வாகனங்களை பறிமுதல் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை இரவு வீட்டில் இருந்து […]
திருப்போருரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட மாணவன். மாணவன் தற்கொலை செய்ததற்கு ராகிங் செய்தது தான் காரணமா?என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கின்றன. திருப்போரூரை அடுத்த காலவாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கிஷோர் என்ற தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியை சேர்ந்த மாணவன் கடந்த செவ்வாய் கிழமை தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருப்போரூர் காவல்துறையினர் சம்பவ […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுவள்ளூர் கிராமத்தை சார்ந்தவர் ரோஜா. இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவர் காரை கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரோஜா கர்ப்பமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ரோஜா , ராஜேஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு ராஜேஷ் சம்மதம் தெரிவித்து உள்ளார்.இதை அடுத்து ராஜேஷ் ஒரு வாரத்திற்கு முன்பு ரோஜாவை அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் […]
காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி உள்ளது, பனையூர் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள், மூன்றிலிருந்து ஐந்து அடி வரை பள்ளம் தோண்டி அதில் இருந்து அப்பகுதி மக்கள் தண்ணீர் எடுத்து வந்தனர். இந்நிலையில் பகுதியில் நேற்று பெய்த மழையால் அந்தப் பள்ளத்தில் நீர் நிறைந்திருந்தது. அருகாமையில் விளையாடிக்கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த இரண்டரை வயது குழந்தை சஞ்சீவீனா, […]
காஞ்சிபுரம் மாவட்டம் கீழ் படப்பை கரசங்கால் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம்மில் 2 வாலிபர்கள் கதவை பூட்டிக்கொண்டு இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்தபோது சிக்னல் மூலமாக மும்பை தலைமை அலுவலகத்திற்கு தகவல் சென்றது. உடனே மும்பை அலுவலகத்தில் இருந்து ஓட்டேரி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஓட்டேரி மற்றும் மணிமங்கலம் காவல்துறை விரைந்து வந்து கொள்ளை அடிக்க முயற்சி செய்த இரண்டு மாணவர்களையும் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் இவர்கள் காஞ்சிபுரத்தைச் […]
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த ரத்தினமங்கலத்தில் ஒரு பெட்டி கேட்பாரற்றுக் கிடந்துள்ளது.இதனை கண்ட மக்கள் பீதி அடைந்தனர்.எனவே இந்த தகவல் அறிந்த வெடி குண்டு நிபுணர்கள் ஆய்வில் இறங்கினர் .அப்போது பெட்டியை எடுத்து பார்க்கும் போது உள்ளே இருந்த பொருளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வெடிகுண்டு நிபுனர்கள் பெட்டியை திறந்து பார்க்கும் போது உள்ளே பித்தளைக்குடம் ஒன்று இருந்துள்ளது. மக்களுக்கு பீதி ஏற்படுத்துவதற்காக சில விஷமிகள் காலி குடத்தை வைத்து பெட்டியை தயாரித்து வைத்துள்ளனர் என்று இந்த […]
கடந்த ஞாயிற்று கிழமை அன்று காஞ்சிபுரம் மாவட்டம், அனுமந்தபுரம் பகுதியில் உள்ள ஏரிக்கரையில், ராணுவ பயிற்சிகாக பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் சில செயல் இழந்தும் செயல் இழக்காமலும் இருந்துள்ளது. இதனை அங்குள்ள இளைஞர்கள் எடுக்கையில் அவை வெடித்து சிதறின. இதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். அதன் பின்னர் நேற்று இந்த இடத்தில் 10 வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டன. அதில் சில செயல் இழந்தும், சில செயல் இழக்காமலும் கிடைத்துள்ள்ளன. இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை அடுத்து […]
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு தாலுகா பகுதிக்கு உட்பட்ட அனுமந்தபுரம் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த குண்டுகள் பாதி வெடித்தும் பாதி வெடிக்காமலும் கிடைக்கப் பெற்று உள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இது குறித்து விசாரிக்கையில், குறிப்பிட்ட அனுமந்தபுரம் ஏரிப்பகுதி பகுதியில் காவல்துறையினரும் இராணுவத்தினரும் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ளும் பகுதியாகும் இங்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இதுபோல பயிற்சி நடைபெறும். அந்த பயிற்சி நடைபெற்று முடிந்த பின்னர், இது […]
தனியார் தண்ணீர் லாரிகள் பல தண்ணீர் எடுக்க உரிமம் இல்லாத காரணத்தால் அவ்வப்போது சிறைபிடிக்க படுவதால், தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரிகள் சங்கம் அணைத்து தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 4500 லாரிகள் பங்கேற்றுள்ளன. லாரிகள் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் தண்ணீருக்கு பெரும்தட்டப்படு ஏற்படும் அபாயம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. தற்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், ‘ இன்னும் ஓரிரு நாட்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 45 லாரிகளுக்கு லைசன்ஸ் […]
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள்கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி வரதர் மக்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை1-ம் தேதி முதல் கடந்த மாதம் 17-ம் தேதி வரை அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முதல் 31 நாள்கள் வரை அத்திவரதர்சயன கோலத்திலும், அடுத்த 17 நாள்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அத்திவரதரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை […]
காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் என்ற இடத்தில் கஞ்சா வியாபாரி புருஷோத்தமன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கஞ்சா போதையில் சாலையில் செல்பவர்கள் மீது பட்டா கத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் தனஞ்செழியன் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் 6 பேர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டு உள்ளனர்.
காஞ்சிபுரம் பெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த ஜூலை 1-ம் தேதி அனந்த குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்க தொடங்கினார். முதல் 31 நாள்கள் சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர். பின்னர் கடந்த 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து அத்தி வரதரை காண தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். மேலும் கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் இருந்து பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசனம் செய்ய வந்தனர். அத்திவரதரை […]
அத்திவரதர் வைபவத்தின் 48-வது நாளான நேற்று காலை மற்றும் மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஆகம விதி படி அத்திவரதரை வைப்பதற்கான பணிகள் நடைபெற்றது.இதை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அத்திவரதர் வசந்த மண்டபத்தில் இருந்து அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் சயன கோலத்தில் வைக்கப்பட்டார். அவர் அருகில் நாக சிலைகளும் வைக்கப்பட்டது.40 வருடங்கள் அத்திவரதர் எந்தவிதமான பாதிப்பு ஏற்படாமல் இருக்க மூலிகை கலந்த தைலக்காப்பு பூசப்பட்டு உள்ளது.அத்திவரதர் சிலை வைக்கப்பட்டதும் காஞ்சிபுரம் சுற்று வட்டாரத்தில் […]
அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுவதால் நாளை கோவில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்பட உள்ளார். நாளை அத்திவரதருக்கு 6 கால பூஜைகள் ஆகம விதிப்படி நடைபெற உள்ளது. அதன் பின்னர் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்படுவர்.அத்திவரதர் குளத்தில் கொண்டு செல்லப்படுவதால் நாளை பக்தர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அளித்த பேட்டியில் இரவு 9 மணிக்கு கிழக்கு கோபுர வாசல் மூடப்பட்டு உள்ளே இருக்கும் பக்தர்கள் மட்டும் நள்ளிரவு […]