தமிழகத்தில் மேலும் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்க தலைமை செயலாளர் அறிவுறுத்தல். மாண்டஸ் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களுக்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்க தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். புயல் முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனையின்போது மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, சாலவாக்கம் பகுதியில் அரசு பேருந்து மீது கனரக லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம், படூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று காஞ்சிபுரம் நோக்கி வந்துள்ளது. அப்போது சாலவாக்கம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது அப்பகுதியில் கல்குவாரியில் இருந்து வந்த கனரக லாரி பக்கவாட்டு பகுதியில் மோதியுள்ளது. இதில், லாரியில் இருந்த பக்கவாட்டு தகரம் மோதியதில் பேருந்தில் பயணித்த ரதி […]
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீரின் அளவு 500 கனஅடியில் இருந்து 1000 கனஅடியாக இன்று மாலை 3 மணி முதல் திறக்கப்பட உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதிலும், குறிப்பாக சென்னை சுற்றியுள்ள மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1510 கனஅடி நீர் வந்துகொண்டு இருக்கிறது. ஏற்கனவே 500 கன அடி நீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வரும் […]
காஞ்சிபுரத்தில் கேஸ் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8-ஆக உயர்வு. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே கேஸ் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது. தேவரியப்பாக்கத்தில் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் காயம் அடைந்து சென்னை, செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, 7 பேர் உயிரிழந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அருண் என்பவர் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காஞ்சிபுரம் […]
இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை. சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குகிறது. இன்று தொடங்கும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஏற்பாடுகள் குறித்து மாமல்லபுரத்தில், இன்று காலை 11 மணிக்கு அமைச்சர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு […]
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு ஜூலை 28 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா […]
மாமியார் வீடான தமிழகத்தின் பெருமையை மெச்சும் வண்ணம் ஆந்திராவில் சிறப்பாக பணியாற்றுவேன் என ரோஜா பேட்டி. ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் விளையாட்டு இளைஞர் நலன் துறை அமைச்சர் ரோஜா அவர்கள் இன்று காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். அப்போது அவருடன் பொதுமக்கள் சூழ்ந்து கொண்ட நிலையில், அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர். சாமி தரிசனத்திற்கு பின்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆந்திராவில் தன்னை சுற்றுலா விளையாட்டு, கலாச்சாரத் துறை அமைச்சராக […]
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த தனியார் கல்லூரியில் மாணவிகள் மது அருந்திய வீடியோ வைரலானதையடுத்து 6 பேர் சஸ்பெண்ட். காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த கல்லூரியை சேர்ந்த மாணவிகள் குளிர்பானத்தில், சாராயத்தை கலந்து அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்த வீடியோ அக்கல்லூரி முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. […]
காஞ்சிபுரம்:ஒரகடம் பகுதியில் போராட்டம் நடத்திய ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணிபுரியும் 22 பெண் தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இதில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில்,ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவை சாப்பிட்ட பெண்களில் 116 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து, தரமற்ற உணவை உட்கொண்ட எட்டு பெண் தொழிலாளர்கள் இறந்துவிட்டதாக […]
தொடர்மழை காரணமாக காஞ்சிப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், தொடர்மழை காரணமாக ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு […]
காஞ்சிபுரத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கனமழை காரணமாக சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பள்ளி செல்லும் மாணவர்களுக்கு சிரமம் உள்ளதால் சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே, தூத்துக்குடி, நெல்லை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுதும் காஞ்சிபுரத்தில் […]
காஞ்சிபுரத்தில் 7 அரசு பள்ளிகளுக்கு மட்டும் இன்று மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையினால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.இதன்காரணமாக, சாலைகள்,பள்ளிகள் என பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது.இதனால்,மழை பாதிப்பை பொறுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில்,மழைநீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், வாலாஜாபாத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்டத்தில் முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை அறிவித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கியின் ஜன்னல் கம்பிகளை அறுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பஜார் பகுதியில் உள்ள சவுத் இந்தியன் வங்கியில் உள்ள லாக்கரை உடைத்து பணத்தை கொள்ளை அடிப்பதற்காக மர்ம நபர்கள் சிலர் அந்த வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததையடுத்து மணிமங்கலம் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அங்கு சென்று பார்த்த போது […]
காஞ்சிபுரத்தை சேர்ந்த திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அதிமுகவை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மதூர் கிராம பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் தான் 56 வயதுடைய சண்முகம். இவர் திமுக முன்னாள் ஊராட்சி மன்றத்தின் தலைவராகவும், திமுக சாலவாக்கம் ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளராகவும் இருந்துள்ளார். மேலும், இவர் ரியல் எஸ்டேட் மற்றும் சாலை காண்ட்ராக்ட் பணிகளை செய்து […]
அரசியல் களம் பிக்பாஸ் போன்றது அல்ல எனவும் அந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுகள் கூட கமலஹாசனுக்கு கிடைக்காது எனவும் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் அவர்கள் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 104வது பிறந்த நளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அதிமுக சார்பில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் அவர்கள் கலந்துகொண்டு மேடையில் உரையாற்றியுள்ளார். […]
தடையை மீறி நடத்தப்பட்ட காஞ்சிபுர வேல் யாத்திரையில் இன்று எச்.ராஜா மற்றும் அவருடன் இருந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பா.ஜா.க சார்பில் தமிழகத்தில் நடத்தப்படவியருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில இடங்களில் பாஜகவினர் அத்து மீறி வேல் யாத்திரை நடத்தி வருகின்றனர். தடையை மீறி நடத்தப்படக்கூடிய இந்த வேல் யாத்திரையில் கலந்துகொள்பவர்களை தடுக்க போலீசாரும் தயார் நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் எச்.ராஜா அவர்கள் தலைமையில் இன்று காஞ்சிபுரத்தில் வேல் யாத்திரை நடத்தப்பட்டுள்ளது. அங்கு அவர் […]
கள்ளகாதலிக்கு கஞ்சா கொடுத்து உல்லாசமாக இருந்தவரை கொலை செய்த கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜவகர்லால் தெருவினை சேர்ந்த ரவிச்சந்திரனின் மனைவி தான் காமாட்சி. இவர்களுக்கு திருமணமாகி 11 வருடமாகிறது, ரவிச்சந்திரன் ஆக்டிங் டிரைவராக வேலை செய்வதால் பல நாட்கள் வீட்டில் இருக்க முடிவதில்லை. ரவிச்சந்திரன் வெளியில் வேலைக்கு சென்றதும் காமாட்சி அவரது அம்மா வீட்டுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அங்கு அவருக்கு தினேஷ் என்பவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானவர், […]
வயலில் விவசாயம் செய்துகொண்டிருந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்த மு.க.ஸ்டாலின். மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இடங்களிலும் விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினரால் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் திமுக தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த வேளாண் சட்டங்களை கண்டித்து இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மு க […]
காஞ்சிபுரத்தில் இரு கூட்டாளிகளிடம் இருந்து 350 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எல்லாம் ரகசியமாக கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்பட்டு வருவதாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து தீவிர கண்காணிப்பில் இருந்த குன்றத்தூர் காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சம்சுதீன் என்பவர் கடையில் குட்கா விற்கப்பட்டதை […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆய்வு செய்கிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பே அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மாவட்ட ஆட்சியர்கள் ,அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.மேலும் திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆய்வு செய்கிறார்.மேலும் […]