காஞ்சிபுரம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த கார் மீது, அரசு பேருந்து மோதிய விபத்து! 5 பேர் பலி …..
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த கார் மீது, அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
சென்னையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற கார் ஒன்று, மதுராந்தகத்தை அடுத்த தொழுப்பேடு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டு இருந்தது. அப்போது, சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற அரசு பேருந்து கார் மீது பின்புறமாக மோதியது.
மோதிய வேகத்தில், அருகில் இருந்த ஏரியில் கார் தலைகீழாக கவிழ்ந்தது நீரில் மூழ்கியது. இந்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த தமிழ்செல்வி, தினேஷ், பிரபாவதி, ராதிகா, இளம்பரிதி ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். காயங்களுடன் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
source: dinasuvadu.com