காஞ்சிபுரத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்.! 

Tamilnadu CM MK Stalin

மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த மாதம் ஜூலை 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை டோக்கன், விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு 24ஆம் தேதி முதல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குடும்பத்தலைவிகளிடம் இருந்து அந்தந்த ரேஷன் கடைகளில் பெறப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும். அதன் பிறகு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும் எனவும் ஏற்கனவே அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுவிட்டது.

 இதனை அடுத்து 3ஆம் கட்டமாகவும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு அவையும் பெறப்படும். இதுவரை மொத்தமாக 50 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கலைஞர் உரிமை தொகை திட்டமானது மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி துவங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, வரும் செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
virender sehwag ms dhoni
iran trump
MIvsKKR
Sekarbabu
sengottaiyan
Ruturaj Gaikwad